கொத்துக் குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமானப்படை விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக் குண்டுகள்
கொத்துக் குண்டுகள், 1960

கொத்துக் குண்டு என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக்காத வெடிகலங்கள் வெடித்து பெரும் அழிவு ஏற்படுத்த வல்லவை.[1] இதனால் இந்தக் குண்டை போரில் பாவிப்பதில்லை என 94 நாடுகள் மே 2008 ஒரு பன்னாட்டு உடன்படிக்கை செய்துள்ளன. எனினும் இலங்கை படைத்துறை ஈழத்தமிழர்களுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கொத்து குண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வளவு ஆபத்தானவை?

வெளி இணைப்புகள்[தொகு]

தொழில்நுட்பம் சார்ந்தவை
செயற்திட்டங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்துக்_குண்டு&oldid=3366522" இலிருந்து மீள்விக்கப்பட்டது