கொங்கணி எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.

கொங்கணி எழுத்துமுறையின் மூலம் கொங்கணி மொழி எழுதப்படுகிறது. கொங்கணி மொழியின் அதிகாரப்பூர்வ எழுத்துவடிவமாக தேவநாகரியை தேர்ந்தெடுத்து, உத்தரவு பிறப்பித்தது இந்திய அரசு.[1][2]

கொங்கணி மொழியை லத்தீன், கன்னட, அரேபிய, மலையாள எழுத்துக்களால் எழுதும் வழக்கமும் உண்டு.

விதிகள்[தொகு]

உயிர்[தொகு]

  1. சொல்லின் இறுதியில் வரும் அகர ஒலி நீக்கி சொல்லை உச்சரிக்க வேண்டும். எ.கா: देव - தேவ் (தேவ என்று உச்சரிக்கக்கூடாது)
  2. மூன்றெழுத்துள்ள சொல்லில் இறுதி ஒலி அகரமாக இல்லையெனில், இரண்டாவது எழுத்தில் அகரம் இருக்குமெனில், இரண்டாவது எழுத்தில் அகரத்தை நீக்கி உச்சரிக்க வேண்டும். எ.கா: चॆरकॊ = சேர்கோ (சேரகோ என்று படிக்கக் கூடாது)
  3. நான்கெழுத்துள்ள சொல்ல இறுதி எழுத்து அகரமாக இல்லாதிருந்தால், இரண்டாவது எழுத்தை நோக்க வேண்டும். அது அகரமாக இருப்பின், அந்த இடத்தில் அகரத்தை நீக்கி படிக்க வேண்டும். எ. கா: उपकार என்பதை உப்கார் என்று படிக்க வேண்டும். (உபகார என்று படிக்கக் கூடாது)

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Goa, Daman and Diu Act, 1987 section 1 subsection 2 clause (c) defines "Konkani language" as Konkani in Devanagari script, and section 3 subsection 1 promulgates Konkani to be the official language of the Union Territory.
  2. On 20.8.1992 Parliament of India by effecting the 78th amendment to the Constitution of India, Konkani in Devanagari script has been included in VIIIth Schedule of Constitution of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணி_எழுத்துமுறை&oldid=2034087" இலிருந்து மீள்விக்கப்பட்டது