கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைலைக் கலம்பகம் என்பது குமரகுருபரர் இயற்றிய கலம்பக வகையைச் சேர்ந்த ஒரு சிற்றிலக்கியம். இவர் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். அவ்வூரின் வடபகுதியில் திருக்கைலாசம் என்னும் ஒரு பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாசநாதருக்குக் கோயில் ஒன்றும் உண்டு. இந்த இறைவன் மீது பாடப்பட்டதே இக் கலம்பகம். இந்த நூல் இன்று முழுமையாக இல்லை. சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.[1] திருநெல்வேலி, தென்னிந்திய-சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட குமரகுருபரரின் பிரபந்தத் திரட்டு நூலில் கைலைக் கலம்பகச் செய்யுட்கள் சிலவும் உள்ளன.[2]

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]