கேப்ரியல் பேப்பில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேப்ரியல் பேப்பில்லான் என்று தொழில் ரீதியாக அறியப்படும் கேப்ரியல் ஸ்ட்ராஸ்ஃபீல்ட்,விருது பெற்ற கெனடிய இசைக்கலைஞர் மற்றும் ஹாலிஃபாக்ஸை அடிப்படையாகக் கொண்ட பாடல் எழுத்தாளர் ஆவார்.[1][2][3]

வாழ்க்கை வரலாறு[தொகு]

2015ம் ஆண்டில் அவர் தனது ஐந்தாவது ஆல்பமான 'தி டெம்பெஸ்ட் ஆஃப் ஓல்ட்' ஐ வெளியிட்டார்.இது கனேடிய தேசிய வளாக வானொலி,சிபிசி வானொலி 2 மற்றும் சர்வதேச ஐட்யூன்ஸ் பாடகர்கள்-பாடலாசிரியர்களின் தரவரிசையில் பட்டியலிடப்பட்டது.ஆண்டின் சிறந்த பதிவான இது 'நோவா ஸ்கோடியா' விருதை வென்றது.மேலும் அவர் மூத்த இசை மேலாளர் பீட்டர் ஜென்னருடன் பணிபுரிய தொடங்கினார்.அவர் தனது ஆறாவது ஆல்பமான 'கீப் தி ஃபயர்' ஐ வெளியிட்டார்.இந்த ஆல்பம் நான்கு இசை நோவா ஸ்கோடியா விருதுகள் மற்றும் கனடிய நாட்டுப்புற இசை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.பாப்பில்லோனின் ஏலாவது ஆல்பமான 'ஸவ்ட்(shout)' 2019ல் வெளியிடப்பட்டது.

பாப்பில்லோனின் ஆல்பங்களின் பாடல்கள் கனடா,அமெரிக்கா,ஆஸ்திரேலியாவில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்களில் வெளிவந்துள்ளன.

கனேடிய ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேசன் 'கியு'வின் தொகுப்பாளரான டாம்பவர் ,"பாப்பிலோனை நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்" என்று அழைத்தார்.

படைப்புகள்:

Year Work Label
2001 Songs For a Rainy Day Little Bug Records
2010 The Wanderer Little Bug Records
2011 The Currency of Poetry Little Bug Records
2012 Little Bug Little Bug Records
2015 The Tempest of Old Little Bug Records
2017 Keep the Fire The state51 Conspiracy
2019 Shout The state51 Cons

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_பேப்பில்லான்&oldid=3893639" இலிருந்து மீள்விக்கப்பட்டது