கேத்தி வில்காக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேட்டி வில்காக்ஸ் என்பவர் அமெக்காவைச் சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் மதுரையிலுள்ள லேடி டோக் கல்லூரியை தொடங்கியவர் ஆவார்.

கி.பி.1889, ஜூலை26 அன்று பிறந்த இவர் இந்தியாவில் 1915 முதல் 1958 வரை சேவை புரிந்துள்ளார். லேடிடோக் கல்லூரியில் 1948 முதல் 1958 வரை சேவையாற்றியுள்ளார். மதுரை கேப்ரன்ஹால் பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிய வந்த இவர் அப்பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி நாய்ஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ஓ.சி.பி.எம். பெண்கள் மேனிலைப் பள்ளி, நாய்ஸ் ஆங்கிலவழிப் பள்ளியைத் தொடங்கியவர் இவர். இவரது கடும் உழைப்பில் 1948ல் லேடிடோக் கல்லூரியை தொடங்கினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேவை செய்த இந்த அம்மையார் 1974ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். [1]


மேற்கோள்கள்[தொகு]

1. டோக்பெருமாட்டி கல்லூரி கையேடு

வெளி இணைப்புகள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தி_வில்காக்ஸ்&oldid=2399620" இலிருந்து மீள்விக்கப்பட்டது