கெலவரப்பள்ளி நீர்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலவரப்பள்ளி (அல்லது ஆவலப்பள்ளி) நீர்தேக்கம்

கெலவரப்பள்ளி நீர்தேக்கம் (Kelavarapalli),(ஆவலப்பள்ளி அணை என்றும் அழைக்கப்படுகிறது) கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஒசூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கெலவரப்பள்ளி என்ற சிற்றூரில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இத்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை 1993 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 481 மில்லியன் கன அடிகள்.[1] இதிலிருந்து நாளுக்கு இரண்டு மில்லியன் காலன் நீர் ஒசூர் தொழிற்பேட்டைக்கு வழங்கப்படுகிறது. இந்நீர் தேக்கத்தின் வலப்புற கால்வாய் 22.6 கி.மீ நீளமும், இடப்புற கால்வாய் 32.5 கி.மீ நீளமும் கொண்டது. [2]அணையில் ஒரு சிறிய பூங்காவும் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 483