குருவாயூர் கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கஜராஜன் குருவாயூர் கேசவன் (1904 - டிசம்பர் 2, 1976) தென் இந்தியாவில், குறிப்பாக கேரளாவில், மிகவும் புகழ் பெற்ற மற்றும் மக்களால் போற்றப்பட்ட கேரளத்து யானை, ஆகும்.

பரம்பரையாக காணப்படும் வழக்கம்[தொகு]

நீலாம்பூர் நாட்டு ராஜவம்ச குடும்பத்தினர் இந்த கேசவன் என்ற பெயருடன் கூடிய யானையை 1916 ஆம் ஆண்டில் ஹிந்துக்களின் குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.[0] இதுபோன்று கேரள நாட்டில் கோவில்களுக்கு யானையை நன்கொடையாக, ஒரு வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, அளிப்பது பரம்பரையாக காணப்படும் ஒரு வழக்கமாகும்.

யானைகள் சரணாலயம்[தொகு]

மேலும் குருவாயூர் கோவிலில் யானைகளுக்கென்றே ஒரு சரணாலயம் உருவக்காப்பட்டு அங்கே யானைகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதோடல்லாமல், அவை நன்கு வளர்க்கப்பட்டும் பயிற்சிகள் அளிக்கப்பட்டும் வருகின்றன, மேலும் புன்னத்தூர்கோட்டையில் அமைந்த இந்த சரணாலயத்தில் தற்பொழுது நூற்றுக்கும் மேலான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன்[தொகு]

3.2 மீட்டர் உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன், மிகவும் கனிவான, பணிவான யானையாக மட்டும் அல்லாமல், குருவாயூரப்பனிடம் மிகவும் பக்திகொண்டவனாகவும் காணப்பட்டான்.

ஏகாதசி விரதம்[தொகு]

யானையின் பக்தியை மெச்சும் வகையில், "குருவாயூர் ஏகாசசி" என போற்றப்படும் தலை சிறந்த வழிபாட்டு நாள் அன்று, குருவாயூர் கேசவனின் உயிர், உடலை விட்டு கோவில் வளாகத்தில் பிரிந்தது. பக்தர்கள் ஏகாதசி விரதம் அன்று உண்ணாமல் இருப்பது போலவே, அன்றைய நாள் முழுவதும் கேசவன் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை, மேலும் மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை புவியில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது.

குருவாயூர் கேசவனின் நினைவு நாள்[தொகு]

இதன் நிமித்தமாக குருவாயூர் கேசவனின் நினைவு நாள் ஆண்டுதோறும் குருவாயூர் ஏகாதசியன்று கொண்டாடப்படுகிறது. நூற்றுக் கணக்கான யானைகளில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டு, குருவாயூர் கேசவன் யானையின் சிலைக்கு, தலைமை யானை மலர் மாலை அணிவிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

கஜராஜன் (யானைகளின் ராஜா)[தொகு]

குருவாயூர் தேவஸ்வம் குருவாயூர் கேசவனின் சேவைகளை மெச்சியபடி, கேசவனுக்கு "கஜராஜன்" (யானைகளின் ராஜா) என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.

இங்கே உறையும் இறவன் குருவாயூரப்னுக்கான பல வேள்விகளிலும், உறசவங்களிலும் மற்றும் நித்ய பூஜைகளிலும் கலந்து கொண்டு, இன்றி அமையாத சேவைகள் புரிந்தமைக்காக, குருவாயூர் கேசவனின் சிலை ஒன்று போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இன்று கோவில் வளாகத்திலேயே குருவாயூர் தேவஸ்வத்தினரால் நிறுவப்பட்டுள்ளது. குருவாயூர் கேசவனின் நீண்ட அழகான கொம்புகள் மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று, இன்றும் பிரதான கோவிலின் கதவுக்கு மேல் அலங்கரிப்பதை நாம் இன்றும் காணலாம்.

மலையாள திரைப்படம்[தொகு]

மேலும் குருவாயூர் கேசவனின் வாழ்கையை பின்பற்றி, "குருவாயூர் கேசவன்" என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும் எடுக்கப்பட்டது, இப்படம் கேரளத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும்.

குறிப்புதவிகள்[தொகு]

  • குருவாயூர் தேவஸ்வம் வலைத்தளம்
  • ஐ எம் டி பி

அடிக்குறிப்புகள்[தொகு]

  • [0] தி இந்து : தேசீயம் : `குருவாயூர் கேசவன்' நினைவு கூர்ந்தது

மேலும் பார்க்க[தொகு]

  • கேரளத்தின் பாரம்பரியத்தில் யானைகள்
  • குருவாயூர் கோவில்
  • 1904 விலங்குகள் பிறப்பு
  • 1976 விலங்குகள் இறப்பு
  • புகழ் பெற்ற யானைகள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=குருவாயூர்_கேசவன்&oldid=572707" இருந்து மீள்விக்கப்பட்டது