குருதியின் கன அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருதியின் கன அளவு (Blood volume) என்பது மனித உடலிலுள்ள குருதியின் மொத்த கனஅளவாகும். 70 கிலோ கிராம் எடையுள்ள ஒரு மனிதரின் உடலில் சுமார் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் காணப்படும். குருதியிலுள்ள செவ்வணுக்கள் உயிரணுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் எச்சமாகத் தோன்றும் கரிஇரு தீயதை (கார்பன் டை ஆக்சைடை CO2) அகற்றவும் உதவுகின்றன. இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் பலவகையிலும் நோய் எதிர்ப்பு பணிகளைச் செய்கின்றன. குருதியிலுள்ள நீர்மப் பகுதி பிளாசுமா எனப்படும். உடலியக்கத்திற்குத் தேவையான பல தனிமங்களும் மிக நுண்ணிய அளவில் உள்ளன. பிளாசுமாவும் வெள்ளை, செவ்வணுக்களும் இணைந்து உள்ளதே குருதியாகும்.

குருதியின் கனஅளவைக் கணக்கிடல்[தொகு]

சிற்சில நேரங்களில் குருதியின் கன அளவு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை மருத்துவத்தின் போது ஏற்படுகிறது. இதற்கு அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) உதவுகிறது.

அணு நிறை 51 கொண்ட கதிரியக்கக் குரோமியம் காமாக் கதிர்களை வெளியிடுகிறது. சுமார் 740 கிலோ பெக்கரல் (kBq ) குரோமியத்தினை, உறிஞ்சியின் துணையுடன் எடுக்கப்பட்ட 10 கன சென்டி மீட்டர் இரத்தத்துடன் கலந்து 10 நிமிடங்கள் பொறுத்திருந்து மறுபடியும் உடலினுள் செலுத்தப்படுகிறது. 15 நிமிடங்களில் இந்த கதிர்த் தனிமம் உடலிலுள்ள எல்லா குருதியுடனும் சீராகக் கலந்து விடுகிறது. இவ்வாறு கலந்துவிட்ட நிலையில் சிறிதளவு இரத்தம் உறிஞ்சிமூலம் எடுக்கப்படுகிறது. உடலிலுள்ள மொத்த குருதியின் கன அளவு V சிசி என்றும் இப்போது எடுக்கப்பட்ட குருதியின் அளவு v சிசி என்றும் கொள்வோம். முதலில் எடுத்துக் கொண்ட குரோமியம் 51 ன், எண்கருவியில் (Counter) பெறப்பட்ட எண் A c/m என்றும் குரோமியம் கலந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட குருதியில் எடுக்கப்பட்ட அளவு a c/m என்றும் கொண்டால், இரண்டிலும் ஒப்புக் கதிரியக்கம் (Specific activity) சமமாக இருக்கும். அதாவது,

இதில் V ஐத் தவிர மற்ற அளவீடுகள் தெரியும் எனவே

கன சென்டி மீட்டர் என்று கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஆதாரம்[தொகு]

சாலியர் குரல் -செப்டம்பர் 1997.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதியின்_கன_அளவு&oldid=1550115" இலிருந்து மீள்விக்கப்பட்டது