குரங்கு குசலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரங்கு குசலா என்பது ராணி வார இதழில் ஆரம்ப காலத்தில் வெளி வந்த ஒரு கேலிச்சித்திரப் பகுதியாகும். இது தமிழ் வாசகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் கேலிச்சித்திரப் பகுதியாகும். அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளை கருத்தாகக் கொண்டு, அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளையும் சார்ந்து இக்கேலிச்சித்திரம் அமைக்கப்பட்டு இருக்கும். குரங்கு குசலா பகுதியை பல வாசகர்கள் விரும்பிப் பார்த்து மகிழ்ந்தனர். பிற்காலங்களில் ராணி இதழில் செய்யப்பட்ட வடிவமைப்பு மாற்றங்களில் குரங்கு குசலா பகுதி நிறுத்தப்பட்டு விட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு_குசலா&oldid=1824234" இலிருந்து மீள்விக்கப்பட்டது