குய்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குய்கோ
இயக்கம்டி. அருள் செழியன்
கதைடி. அருள் செழியன்
இசைஅந்தோணிதாசன்
கெல்வில் மிந்திரா
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புராம் பாண்டியன்
கலையகம்ஏஎஸ்டி ஃபிலிம்ஸ்
வெளியீடு24 நவம்பர் 2023 (2023-11-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குய்கோ என்பது 2023 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை குடி இருந்த கோயில் என்பதன் சுருக்கமாத தலைபிட்டனர். விதார்த், யோகி பாபு, இளவரசு ஆகியோரின் நடிப்பில் அருள் செழியன் இயக்கியிருந்தார். [1]

நடிகர்கள்[தொகு]

கதை[தொகு]

மலையப்பன் (யோகிபாபு) மலைக்கிராமத்தில் பிறந்து அரபு நாடொன்றில் ஒட்டகம் மேய்க்கும் தொழிலை செய்கின்றார். அவருடைய கிராமத்தில் அன்னை இறந்துவிட இறப்பு சடங்குகளை முன்நின்று செய்ய இளவரசு முன்வருகிறார். யோகி பாபு வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருடைய அம்மாவின் உடலை ஐஸ்பெட்டியில் வைக்க முடிவெடுத்து பண்பழகன் என்பவரிடம் வாங்கி வருகின்றனர். அப்போது பண்பழகனிடம் ஆட்கள் இல்லாமையால் உறவினர் விதாத்தை உடன் அனுப்பி வைக்கிறார்.

விதார்த் கணக்கு பாடத்தில் இருக்கும் ஞானம் காரணமாக ஊரில் கணக்கு சொல்லித்தரும் வாத்தியாராக பணி செய்தவர். மலைக்கிராமத்தில் கணக்கு பாடம் கடினமாத இருப்பதாத கூறும் மாணவர்களுக்கு பாடம் கற்றுதந்து நற்பெயர் சம்பாதிக்கிறார்.

விமர்சனங்கள்[தொகு]

திரைக்கதையில் ஒரு ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் படம் முடியும்வரை எந்தவொரு உணர்வும் கடத்தப்படாமல் தட்டையாகவே இருப்பது பெரிய குறை என விகடன் திரைவிமர்சனத்தில் குறிப்பிடப்படுகிறது. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/1159273-kuiko-movie-review.html
  2. குய்கோ விமர்சனம்: யோகி பாபு - விதார்த் கூட்டணி; சிறுகதை கன்டன்ட் ஃபீல் குட் சினிமாவாக மாறியதா? - 26th Nov, 2023

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குய்கோ&oldid=3894966" இலிருந்து மீள்விக்கப்பட்டது