கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெட்சுமி நரசிம்மர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருட்டிணகிரி மாவட்டம்
அமைவு:தேன்கனிக்கோட்டை வட்டம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழகக் கட்டிடக் கலை

லெட்சுமி நரசிம்மர் கோயில் (Lakshmi Narasimhar Temple) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கும்ளாபுரம் என்ற ஊரில் உள்ள நரசிம்மர் கோயில் ஆகும்.[1] இக்கோயில் கிருட்டிணகிரியிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 329 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் 600 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும் விசயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய அமைப்புகளோடு கருங்கல்லால் சிற்ப்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரில் நரசிம்மர் இரனியனை வதம் செய்யும் காட்சி, லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், கோவர்த்தனதாரி, காளிங்கநர்தனர், லெட்சுமி நரசிம்மர், வரதராசர், நவநீதக்கிருட்டிணன், கிருட்டிணர் யசோதை முன்பு தோப்புக்கணரம் போடுதல், இராமன், இலக்குவன், சீதை அனுமான், விட்டுணு, அனந்த சயனர் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. முகமண்டபத் தூண்களில் கண்ணன், நரசிம்மர் ஆகியோரின் பவ்வேறு தோற்றங்கள் செதுக்கபட்டுள்ளன.[2]

கோயிலுக்கு முன் உள்ள கருடக் கம்பத்தின் பீடத்தில் நான்கு புறமும் இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடுபவர்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளன.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி (2023-10-18). "லட்சுமி நரசிம்மர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. மலர், மாலை (2023-10-18). "கும்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆய்வில் கண்டுபிடிப்பு". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)