குண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Buttocks | |
|---|---|
| Male human buttocks | |
| Female human buttocks | |
| தமனி | superior gluteal artery, inferior gluteal artery |
| நரம்பு | superior gluteal nerve, inferior gluteal nerve, cluneal nerves |
| ம.பா.தலைப்பு | Buttocks |
குண்டி (buttock) என்பது பொதுவாக மனிதன் மற்றும் மனிதக் குரங்கு போன்ற விலங்குகளின் உடலில் பின் பகுதியில் முதுகுப்பகுதிக்குக் கீழே இருக்கும் உருண்டையான, சதைப் பிடிப்புள்ள ஒரு உறுப்பாகும்.
குண்டி என்ற சொல்லுக்கு நிகராகப் பயன்படுத்தும் பிற சொற்களும் அவற்றின் பயன்பாடும்:
- பின்னழகு - இது பொதுவாக குண்டியை நகைச்சுவையாக குறிப்பிடும் பொழுது பயன்படுத்தப் படுகிறது.
- சூத்து - தகாத வார்த்தை. பொது இடங்களில் இந்த வார்த்தை பயன்பாட்டை தவிர்க்கவும்.
- பொச்சு - இதுவும் தகாத வார்த்தைதான்.
- பின் பக்கம் - இது ஒரு இடக்கர் அடக்கல் பயன்பாடாகும். குண்டி என்று நேரடியாக கூறத் தயங்குபவர்கள் இந்த வார்த்தையை பயன் படுத்துவர்.
[தொகு] நாகரிகம்
குண்டி என்பது ஆபாசமில்லாத ஒரு உறுப்பு என்றாலும் நவீன நாகரிகம் இதைப் பெரும்பாலும் மறைக்கவே சொல்லுகிறது. தற்பொழுதுள்ள அனைத்து வகைத் துணிகளும் குண்டியை மறைத்தே வைக்கிறது. இருப்பினும், குண்டி வெளியே தெரியும் ஆடைகள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (கோவணம் போன்றவை). ஆனால், மக்கள் பொதுவாகக் கூடும் இடங்களில் இவற்றை யாரும் உடுத்துவதில்லை.