குஞ்சுக் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஞ்சு குளம் அல்லது குஞ்சுக் குளம் என்பது இலங்கை, அநுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். தற்காலத்தில் தமிழர்களே வசிக்காத இப்பகுதியில் தமிழ் வழக்கைக் கொண்ட இப்பெயர் இருப்பது, இந்த ஊரில் முன்னாளில் வசித்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஒரு சான்றாக பார்க்கப்படுகின்றது.

சொல்விளக்கம்[தொகு]

தமிழில் குஞ்சு என்றால் சிறியது என்று பொருள். குளம் என்றால் மாரிக்காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைப்பதற்கு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீர் தேக்கம் ஆகும். சிங்கள மொழியில் "குஞ்சு" என்றால் பொருள் குறிக்கும் எந்த சொல்லும் இல்லை. தவிர குளத்திற்கு "வெவ" என்றே அழைப்பர். அதன் அடிப்படையில் குஞ்சு குளம் என்பது ஒரு தூய தமிழ் சொல்லாகும். தற்போது தமிழர்களே அப்பகுதியில் வசிக்காதப் போதும், தமிழ் வழக்கையொட்டியே குஞ்சு குளம என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சுக்_குளம்&oldid=1771239" இலிருந்து மீள்விக்கப்பட்டது