கீதாஞ்சலி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதாஞ்சலி ராவ்
பிறப்பு1972 (அகவை 51–52)
மும்பை
தேசியம்இந்தியர்
பணிதிரைப்ப இயக்குநர், அசைவூட்டப் படக் கலைஞர், நடிகை
அறியப்படுவதுபிரிண்டடு ரெயின்போ
ட்ரூ லவ் ஸ்டோரி
அக்டோபர்

கீதாஞ்சலி ராவ் ( Gitanjali Rao, பிறப்பு 1972 ) என்பவர் ஓர் இந்திய நாடக நடிகை, அசைவூட்டப் படக் கலைஞர் மற்றும் திரைப்படப் படைப்பாளி ஆவார்.

வாழ்க்கை வரலாறும் தொழிலும்[தொகு]

கீதாஞ்சலி ராவ் மும்பையில் உள்ள சர். ஜே. ஜே இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு ஆர்ட் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு செயல்முறைசார் கலையில் பட்டப் படிப்பை பயின்று முடித்தார். ஆரஞ்சு மற்றும் 'பிரிண்ட்டு ரெயின்போ' என்னும் இரண்டு அசைவூட்டக் குறும்படங்களை சுயாதீனமாக தயாரித்து இயக்கினார். இவரது முதல் அசைவூட்டப் பட குறும்படமான பிரிண்ட்டு ரெயின்போ ( 2006 ) கோடாக் குறும்பட விருது, ஸ்மால் கோல்டன் ரெயில் மற்றும் 2006 இல் கேன்சில் நடந்த கிரிட்டிக்கல் வீக் பிரிவில் இளம் விமர்சகர்கள் விருது போன்ற விருதுகளைப் பெற்றது. பிரிண்ட்டு ரெயின்போ படமானது 2006 மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அசைவூட்டப் படத்திற்கான கோல்டன் காஞ்சவ் விருதையும் பெற்றது.[1][2]

2011 கேன்ஸ் கிரிட்டிகல் வீக் குறும்பட நடுவர் குழு உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்க் குழுவில் கீதாஞ்சலி ராவ் இடம்பெற்று பணியாற்றியுள்ளார்.[3] 2013 ஆம் ஆண்டு, கீதாஞ்சலி ராவ் குறும்படத் தொகுதியில் ஒரு குறும்படத்தை இயக்கினார். இது ஐந்து குறும்படங்களைக் கொண்ட தொகுப்பாக ஷாட்ஸ் என்ற பெயரில் வெளியானது. நீரஜ் கய்வான், வாசன் பாலா, அனுபூதி காஷ்யப் மற்றும் ஷ்லோக் ஷர்மா ஆகியோர் பணியாற்றிய இந்தக் குறும்படங்களின் தொகுப்பை, அனுராக் காஷ்யப் தயாரித்தார்.[4]

இல் 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் இவரது அசைவூட்டப் பட குறும்படமான, ட்ரூ ல்வ ஸ்டோரி கிரிட்டிகல் வீக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 குறும்படங்களில் ஒன்றாக இருந்தது.[5][6]

2018 ஆம் ஆண்டு, ஷூஜித் சிர்கார் இயக்கிய அக்டோபர் என்ற இந்தி நாடகப் படத்தில் வருண் தவான் மற்றும் அறிமுக நடிகையான பனிதா சந்துவுடன் சேர்ந்து திரைப்படத்துறையில் நடிகையாக கீதாஞ்சலி ராவ் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் ( தில்லி ஐஐடி ) பேராசிரியரும், சந்துரு என்ற கதாபாத்திரத்தின் தாயாருமான வித்யா ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பானது பரவலான பாராட்டுகளைப் பெற்றது. மேலும் இவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார்.

இவரது அண்மைய அசைவூட்டப் படமான பாம்பே ரோஸ் (2019) என்ற படமானது தாலினில் நடந்த பாஃப் திரைப்பட விழாவில் சர்வதேச விமர்சகர்கள் தேர்வு திரையிடல்களில் ஒன்றாகும்.[7] மேலும் இது வெனிஸ் சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் வாரம் 2019 இல் திரையிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cannes Winners -Cannes Animations on FILMS short". filmsshort.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  2. "People : Matchbox journeys". 10 September 2006. Archived from the original on 13 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  3. "Cannes: Animator Gitanjali Rao's Latest Film Is a Reaction to Bollywood". www.hollywoodreporter.com. 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014.
  4. "Shorts hasn't been made for box office: Huma Qureshi". India Today. 25 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  5. "After 'Titli', 'True Love Story' at Cannes film fest". Livemint. 22 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
  6. "Cannes falls in love". 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-14.
  7. "Bombay Rose - PÖFF - Pimedate Ööde filmifestival". Archived from the original on 28 April 2020. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  8. "Venice Critics Week". 4 September 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_ராவ்&oldid=3944340" இலிருந்து மீள்விக்கப்பட்டது