கிருஷ்ணராய விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணராய விஜயம் (கிருட்டிணராய விசயம்) என்பது குமார துர்ஜதி என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இவர் கிருட்டிணதேவராயர் காலத்துக்குப் பிற்பட்டவர். தமிழில் உள்ள கலிங்கத்துப் பரணி போன்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட நூல் இது. இது கிருட்டிணதேவ ராயரின் வெற்றிகளை விளம்புகிறது.[1]

கிருட்டிணதேவராயர் கசபதி பிரதாப ருத்திரனை வென்ற செய்தி இதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை 1510 கல்வெட்டு ஒன்றும் குறிப்பிடுகிறது. [2] கஜபதி பிரதாபருத்திரன் உதயகிரி மன்னன். ஒட்டிய மரபினன். கிருட்டிணதேவராயனிடம் தோற்ற இவன் முகமதியர் துணையுடன் தாக்க முயன்றான். தனது படை பின்வாங்கி ஓடிவிட்டதால் இவன் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். கிருட்டிணதேவராயர் இவன் மகளை மணந்துகொண்டார். பின்னர் இவன் கிருட்டிணதேவராயருக்கு உதவுபவனாக மாறினான். இதனை இராபர்ட் சூவெல் [3] தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தோல்விற்ற ஒட்டியன் பற்றி குமார சரசுவதி என்னும் புலவர் பாடியுள்ளார்.

மேற்கோள்[தொகு]

  1. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 - பக்கம் 195-196
  2. A.R.para 41 of 1934
  3. Robert Sewell's Forgotten Empire
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணராய_விஜயம்&oldid=3707404" இலிருந்து மீள்விக்கப்பட்டது