கியோம் அப்போலினேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Apollinaire (left) and André Rouveyre, 1914.

கியோம் அப்போலினேர் (Guillaume Apollinaire, ஆகஸ்ட் 26, 1880 - நவம்பர் 9, 1918) பிரெஞ்சு நாட்டு எழுத்தாளர் ஆவார்; கவிதைத் துறைக்கும் கவிதை குறித்த சிந்தனைகளுக்கும் ஒரு புதிய பார்வையையும் பரந்த வீச்சையும் அளித்தவராகக் கருதப்படுபவர். 38 ஆண்டுகளே வாழ்ந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் மரபு சாரா பிரெஞ்சு கவிதை இயக்கத்தின் முன்னோடி எனப் பாராட்டப்பட்டார். இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஜாக்குலின் என்ற பெண்ணை மணந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் "கவிஞர்களும் நவீன மனப்பாங்கும்" என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை பின்னர் நூலாக்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோம்_அப்போலினேர்&oldid=2714666" இலிருந்து மீள்விக்கப்பட்டது