கா இலிகை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா இலிகை (Ka Likai) என்பது வடகிழக்கு இந்தியாவில் மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள அருவியாகும்.[1] இந்த அருவியின் ஆறு இரங்கிர்த்தில் தொடங்கி நாங்கிரியத்து கிராமம் வழியாகச் செல்கிறது. இந்த அருவி 1000 அடி உயரத்திலிருந்து விழுகிறது.[2] இந்த அருவியினை அருகிலுள்ள லைகைன்சேவ் கிராமத்திலிருந்து காணலாம் என்றாலும் பருவமழை மற்றும் இலையுதிர் காலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. குடும்பச்சூழல் காரணமாக இந்த அருவியில் குதித்து உயிரைத் துறந்த பெண்ணின் பெயரால் இந்த அருவி அழைக்கப்படுகிறது.[1] ஆர்வா குகை, மெளசுமாயி குகை, தேய்ந்தலன் அருவி அருகில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gurdon, I.A, Major Philip Richard Thornhagh; Lyall, K.C.S.I., Sir Charles (1914), Gurdon, I.A., Major Philip Richard Thornhagh (ed.), The Khasis, Macmillan Books, p. 161
  2. "Noh Ka Likai Falls – Meghalaya Tourism" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா_இலிகை_அருவி&oldid=3200755" இலிருந்து மீள்விக்கப்பட்டது