காளிதாசு குப்தா ரிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிதாசு குப்தா ரிசா
Kalidas Gupta Riza
பிறப்பு1925
இந்தியா
இறப்பு2001
பணிஎழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ
காலிப் விருது

காளிதாசு குப்தா ரிசா (Kalidas Gupta Riza) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1] உருது மொழிக் கவிஞர் மிர்சா காலிப்பின் எழுத்துக்களின் மீது அதிகாரம் பெற்றவராகவும் இவர் அறியப்படுகிறார்.[2] மிர்சா காலிப் பற்றிய பல புத்தகங்களை குப்தா ரிசா எழுதியுள்ளார்.[3] இதற்காக 1987 ஆம் ஆண்டு காலிப் விருதையும் பெற்றார்.[4] இந்திய அரசாங்கம் 2001 ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[5] 1995 ஆம் ஆண்டு காளிதாசு குப்தா ரிசா வெளியிட்ட காலிபின் திவான் திவான்-இ-ராசா என்ற பதிப்பு காலிபின் உருது கவிதையின் மிகவும் விரிவான மற்றும் காலவரிசைப்படி அமைந்த சரியான பதிப்பாகும். இம்தியாசு அலியின் 1958 ஆம் ஆண்டு பதிப்பான அர்சிக்கு மாற்றாக இது அமைந்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Library of Congress". Library of Congress. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
    • "Dawn". Dawn. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
    • "Ghalibkaarvaan". Ghalibkaarvaan. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  2. "Ghalib Institute". Ghalib Institute. 2014. Archived from the original on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  3. *"Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  4. Gopi Chand Narang (2017). Ghalib: Innovative Meanings and the Ingenious Mind. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199091515. https://books.google.com/books?id=6b89DwAAQBAJ&q=Arshi. 




.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாசு_குப்தா_ரிசா&oldid=3418680" இலிருந்து மீள்விக்கப்பட்டது