கார்லோசு ஆரியாசு ஓர்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்லோசு பெடரிகோ ஆரியாசு ஓர்டிசு
Carlos Federico Arias Ortiz
பிறப்புமெக்சிகோ
வாழிடம்கியுர்னாவகா மோர்லோசு, மெக்சிகோ
தேசியம்மெக்சிகன்
துறைநச்சுயிரியல்
பணியிடங்கள்உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனம், மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம்
விருதுகள்கார்லோசு சே பின்லே நுண்ணுயிரியல் பரிசு (2001) மற்றும் அறிவியலுக்கான உலக அகாடமி உயிரியல் பரிசு ( 2008) .

கார்லோசு பெடரிகோ ஆரியாசு ஓர்டிசு (Carlos Federico Arias Ortiz) மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஓர் உயிர்வேதியியலாளர் ஆவார். மழலையருக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரசு தொடர்பான ஆய்வுகளில் இவர் நிபுணத்துவம் மிக்கவராக விளங்குகிறார். மனைவி சுசானா லோபசு சார்ரெட்டனுடன் சேர்ந்து 2001 ஆம் ஆண்டுக்கான கார்லோசு சே பின்லே நுண்ணுயிரியல் பரிசும் [1] 2008 ஆம் ஆண்டுக்காக அறிவியலுக்கான உலக அகாடமி வழங்கிய உயிரியல் பரிசும் இணையாக பெற்றனர் [2].

ஆரியாசு ஓர்டிசு மருந்தியலில் இளம் அறிவியல் பட்டமும் , மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் அடிப்படை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களும் பெற்றார். தற்போது, அதே பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார் [3].

1991 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஓர்டிசு ஓவார்டு இயூசு மருத்துவ நிறுவனத்தில் சர்வதேச ஆராய்ச்சி அறிஞராக இருந்தார் [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Liliana Alcántara (2005-10-23). "Susana López Charreton, las gotas de miel de la ciencia" (in Spanish). El Universal. Archived from the original on 2011-06-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "TWAS Prize Awardees Honoured at 11th General Conference". The World Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  3. 3.0 3.1 "HHMI International Research Scholars: Carlos F. Arias, Ph.D." Howard Hughes Medical Institute. Archived from the original on 2006-05-14.

புற இணைப்புகள்[தொகு]