காபூல் நதிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபூல் நதிப் போர்
Battle of Kabul River
இரஞ்சித் சிங்கின் வெற்றிகள் பகுதி
நாள் 1823
இடம் காபூல் நதி, கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
யூசூப்சாய் பழங்குடியினர் வெற்றி
பிரிவினர்
யூசூப்சாய் பழங்குடியினர் சீக்கியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
அசிம் கான் இரஞ்சித் சிங்
பலம்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

காபூல் நதிப் போர் (Battle of Kabul River) 1823 ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசுக்கும் யூசுப்சாய் பழங்குடியினருக்கும் இடையே நடந்தது. காபூல் நதியின் வடக்கே இரஞ்சித் சிங்கின் படையுடன் யூசுப்சாய் பஃக்தூன்கள் போரிட்டனர்.[1]

காபூல் நதி[தொகு]

காபூல் நதி 700-கிலோமீட்டர் நீளமுள்ள (430 மைல்) நதியாகும். இது ஆப்கானித்தானின் மைதான் வார்டக் மாகாணத்தில் உள்ள இந்து குசு மலைகளின் சங்கலாக் மலைத்தொடரில் இருந்து வெளிப்படுகிறது. எல்மண்டு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து உனாய் கணவாய் மூலம் காபூல் நதி பிரிக்கப்பட்டுள்ளது. காபூல் ஆறு பாக்கித்தானின் அட்டோக்கு அருகே சிந்து நதியில் கலக்கிறது. காபூல் நதி கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் முக்கிய நதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Patwant Singh (2008). Empire of the Sikhs: The Life and Times of Maharaja Ranjit Singh. Peter Owen. pp. 120–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7206-1323-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூல்_நதிப்_போர்&oldid=3850697" இலிருந்து மீள்விக்கப்பட்டது