கானல் நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கானல் நீர் என்பது வெப்பமான காலநிலைகளில் பாலைவனங்களிலும், நேரான தார்ப் பாதைகள் போன்றவற்றில் நீர்த்தடாகம் போன்று தோற்றமளிக்கும் தோற்றப்பாடு ஆகும். இது வளியில் ஒளியின் ஒளிமுறிவு (ஒளிவிலகல்) மற்றும் முழு அகத் தெறிப்பு நிகழ்ந்து வானின் எதிரொளிப்பால் தோன்றும் ஒரு மாயத்தோற்றம் ஆகும். கோடைக் காலங்களில் மிகுந்த வெப்பங் காரணமாகத் தரையை ஒட்டிய வளிப்படை சூடடைகின்றது இதனால் இப்பகுதியல் உள்ள வளிப்பட்டை அடர்த்தி குறைந்து காணப்படும். இந்த நிலமட்டத்திற்கு மேல் உள்ள வளிப்படையின் வெப்பநிலை குறைவடைந்து இருப்பதால் வெவ்வேறு விரிவு நிலையில் வளி காணப்படுகின்றது. இதன் காரணமாக வெவ்வேறு ஊடகம் போல் செயற்படுகின்றது. இதில் ஒளி ஊடுருவும்போது முழு அகத்தெறிப்பு நிகழுவதால் ஒளி முறிவடைந்து போலித் தோற்றப்பாடு நிகழுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வெயில் தரும் மாயத் தண்ணீர்!". தி இந்து (தமிழ்). 12 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானல்_நீர்&oldid=3576939" இலிருந்து மீள்விக்கப்பட்டது