காட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை எனும் ஊரில் உள்ள காட்டுத்துறை எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு விநாயகர் ஆலயம் ஆகும். இங்கு பரிவார தெய்வங்களாக மகாலட்சுமி, சந்தான கோபாலர், முருகன், பைரவர் ஆகிய தெய்வங்கள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஆனி மாத ரோகிணி நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்[தொகு]

வண்ணார்பண்ணை வடமேற்கில் ஓட்டுமடம் பகுதியில் ஒடை ஒழுங்கையில் அமைந்துள்ள இவ்வாலயம் பொன்னிறப் பணிகனோடைப் பிள்ளையார் கோயில், காட்டுத்துறை ஆனந்த விநாயகர் கோயில் மற்றும் அம்பலவாண விநாயகர் கோயில் ஆகிய பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளது.


வரலாறு[தொகு]

காட்டுத்துறை ஸ்ரீ அம்பலவாண விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயில் ஆனது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேல் பழைமை வாய்ந்தது

உசாத்துணை[தொகு]

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடமேற்கு காட்டுத்துறை ஸ்ரீ அம்பலவாண விக்கினேஸ்வரப் பிள்ளையார் கோவில் திருத்தல வரலாறு, கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன், 1988.