கவி நர்மத் மத்திய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவி நர்மத் மத்திய நூலகம்
கவி நர்மத் மத்திய நூலகம், 2013
தொடக்கம்24 ஆகத்து 1991
அமைவிடம்சூரத்து
Collection
அளவு2,87,250 புத்தகங்கள் பொதுப் பிரிவில்
42,312 புத்தகங்கள் குழந்தைகள் பிரிவில்
28,377 மேற்கோள் பிரிவில்
1,969 மென் புத்தகங்கள்
175 ஆய்விதழ்கள்
55 தினசரி
2600 பிரெயில் எழுத்து முறை புத்தகங்கள்[1]
Access and use
Population served36,230 உறுப்பினர்கள் பொது நூலகத்தில், 10,625 உறுப்பினர்கள் குழந்தைகள் பிரிவில்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை 2.04 கோடி[2]

கவி நர்மத் மத்திய நூலகம் (Kavi Narmad Central Library) என்பது சூரத்தில் உள்ள ஒரு பொது நூலகம் ஆகும்.

வரலாறு[தொகு]

கவி நர்மத் மத்திய நூலகம் சூரத் மாநகராட்சியினால் 1991-இல் கோட் டோட் சாலையில் கட்டப்பட்டது.[3] இந்நூலகம் 2,26,391 புத்தகங்கள் மற்றும் 46,855 உறுப்பினர்களைக் கொண்டது. இந்நகரத்தில் மிகப்பெரிய நூலகம் இது. நூலக வளாகத்தின் மொத்த பரப்பளவு, 6158 சதுர அடி. மீ ஆகும். இந்நூலகம் 4.03 கோடி செலவில் கட்டப்பட்டது.[4] நூலகத்தில் வாசிப்பு அறை மற்றும் செய்தித்தாள் பிரிவு பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. சூரத்தை சேர்ந்த பிரபல குசராத்தி கவிஞரான வீர் நர்மத்தின் பெயரால் இந்நூலகம் வீர் நர்மத்தின் 158வது பிறந்தநாளில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

18 சனவரி 2011 தகவல் மையம், மூத்த குடிமக்களுக்கான தனிப் பிரிவுகள் மற்றும் அரிய புத்தக சேகரிப்பு, விவாத அரங்கம் மற்றும் ஒலி ஒளிப்பதிவு அறை சேர்க்கப்பட்டது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Narmad Central Library". Surat Municipal Corporation. Archived from the original on 18 November 2012. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
  2. "Narmad Central Library". Surat Municipal Corporation. Archived from the original on 17 October 2012. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
  3. "Attractions of Surat".
  4. "Narmad Central Library". பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவி_நர்மத்_மத்திய_நூலகம்&oldid=3864373" இலிருந்து மீள்விக்கப்பட்டது