கழுகுத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுகுத் தீவுகளின் நாசா படம். வட்டமாக உள்ள சிறிய தீவு கடற்பசு தீவாகும்.

கழுகுத் தீவுகள் (Eagle Islands) என்பது சாகோசு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இரண்டு தீவுகளின் குழுவாகும். இவை உலகின் மிகப்பெரிய பவளத் தீவு அமைப்பாகக் கருதப்படும் கிரேட் சாகோசு பேங்கு தீவின் மத்திய-மேற்கு விளிம்பில் அமைந்துள்ளன.

தீவுகள்[தொகு]

2.45 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள கழுகுத் தீவு கிரேட் சாகோசு பேங்கு தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய ஒற்றைத் தீவாகும். சாகோசு தீவுக்கூட்டத்தில் தியேகோ கார்சியா தீவுக்குப் பிறகு கழுகுத் தீவு இரண்டாவது பெரிய தீவாகும்.

  • கழுகு தீவு
  • கடல் பசு தீவு

வரலாறு[தொகு]

ஒரு காலத்தில் கழுகுத் தீவில் ஒரு தென்னந்தோப்பு இருந்தது, அதே போல் இந்தோ - ஆப்பிரிக்க இனக்குழுவினரான சாகோசிய தோட்டத் தொழிலாளர்களின் சிறிய குடியேற்றமும் இருந்தது. ஆனால் 1838 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தளபதி இராபர்ட் மோரெசுபியின் சாகோசு கணக்கெடுப்பின் போது, இந்த தீவு எப்போதாவது மட்டுமே மக்கள்தொகை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு தோட்டக்காரர்களால் நிகழ்த்தப்பட்ட சாகோசு குழுவின் குடியேற்றத்திற்குப் பிறகு, சாலமன் பவளத்தீவில் உள்ள ஐலே போத்தாம் போன்ற தோட்டங்கள் நடப்பட்ட ஒரு சில தீவுகளில் மட்டுமே தொழிலாளர்களைக் குவிக்கும் போக்கு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1975 ஆம் ஆண்டில், டேஞ்சர் தீவுக்கான கூட்டு சேவைகள் பயணத்தின் போது (JSDI), பயணத்தின் உறுப்பினர்கள் இராயல் துணை கடற்படை கப்பல் மூலம் கழுகுத் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், பின்னர் பாய்மரப் படகுகள் மற்றும் ஊதப்பட்ட மெத்தைப் படகுகள் மூலம் டேஞ்சர் தீவிற்கும் பின்னர் திரீ பிரதர்சு தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயணம் பவளப்பாறைகளின் நிலப்பரப்பு ஆய்வு, அதில் உள்ள பவளப்பாறைகளின் சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் பாறைகளின் வளர்சிதை மாற்றம் பற்றிய ஆய்வு ஆகியவற்றை மேற்கொண்டது. [1] அப்பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் மாதிரிகளின் குறிப்பு சேகரிப்பும் மேற்கொள்ளப்பட்டது. [2]

1998 ஆம் ஆண்டு முதல்,கழுகுத் தீவுகள் சாகோசு தீவுக்கூட்டத்தின் கடுமையான இயற்கை காப்பகத்தின் ஒரு பகுதியாக்கப்பட்டன. தீவுகளில் தரையிறங்கவோ அல்லது அருகில் படகை நங்கூரமிடவோ தடைசெய்யப்பட்டுள்ளது. தீவுகளில் கூடு கட்டும் கடல் பறவைகள் அதிக அளவில் உள்ளன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Baldwin, EA (ed.) (1975), A report on the Joint Services Expedition to Danger Island in the central Indian Ocean, December 1974 to April 1975 Ministry of Defence Publication, London
  2. Chagos Islands coral collections
  3. 6: British Indian Ocean Territory

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுகுத்_தீவுகள்&oldid=3865414" இலிருந்து மீள்விக்கப்பட்டது