கல்லோனி வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லோனி வளைகுடா

கல்லோனி வளைகுடா கிழக்கு ஈஜியனுக்கருகில் உள்ள கிரேக்கத் தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளைகுடாவின் நீளம் 21 கி. மீ. அகலம் 8 கி. மீ. இவ்வளைகுடாவின் முகப்பில் உள்ள 1.5 கி. மீ.ஆகும். இது ஏறத்தாழ 30கி. மீ. தொலைவு வரை பரவியுள்ளது. இந்த வளைகுடாவின் பெரும்பகுதி மிட்டிலினிக்கு வடமேற்கில் மேலும் இரண்டு சமப்பகுதிகளாகப் பிரிகிறது. இவ்வளைவின் மேற்குப் பகுதி, மூவாயிரம் அடி உயரச் சிகரங்களைக் கொண்டுள்ள ஆசியா மைனரின் தொடர்ச்சியான காஸ்டாகி குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. அவ்வாறே கிழக்கு, பகுதிகள் மேற்குத் துருக்கியின் காரா டாக் பகுதியில் தொடர்ச்சியான ஒலிம்பஸ் சிகரத்தால் சூழப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "கல்லோனி வளைகுடா". அறிவியல் களஞ்சியம் தொகுதி ஏழு. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 7 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லோனி_வளைகுடா&oldid=3695050" இலிருந்து மீள்விக்கப்பட்டது