கல்லை ஆ.துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்லை ஆ. துரை (பிறப்பு: ஆகத்து 15, 1942) தமிழக எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். ஆதிமூலம் - இராசம்மாள் ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவர்.

பணி[தொகு]

சென்னையிலுள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.[1]

படைப்புகள்[தொகு]

  • ஞான வாசல்
  • நாதமெனும் கோவிலிலே
  • சிறுவர் மலர்கள்
  • அந்த வனத்தில் ஒரு நந்தவனம்
  • மலரினும் மெல்லியது
  • நீ ஒரு பௌர்ணமி

[2]

சிறப்பு[தொகு]

  • கவிதைக் கோமகன் , கல்லைக் கவிராயர் ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டவர்.
  • மத பேதமின்றி இந்து, இசுலாம், கிறித்துவப் பாடல்களை ஒலி நாடாக்களாக வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆறாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம். 2007. பக். 55. 
  2. கல்லை ஆ துரை. https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லை_ஆ.துரை&oldid=2618936" இலிருந்து மீள்விக்கப்பட்டது