கல்லாவி வேணுகோபால சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:கல்லாவி, தர்மபுரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஊத்தங்கரை
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:வேணுகோபால சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கல்லாவி வேணுகோபால சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி என்னும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இந்த சிறிய கோயிலுக்கு வெளியே கருடஸ்தம்பம் உள்ளது. அதில் புடைப்புச் சிற்பமாக கருடாழ்வார், ஆஞ்சநேயர், சங்கு சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலானது மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்றக் கூறுகளோடு உள்ளது. மகாரண்டபத்தில் கருடாழ்வார் நித்தியசேவை சாதித்தபடி உள்ளார். கருவறையில் கற்பகவிருட்சத்தின்கீழ் இராதை, ருக்மணியுடன் நாற்கரங்களுடன் வேணுகோபாலர் உள்ளார். அவருக்கு ஆதிசேசன் குடைபிடித்தபடி இருக்க, காலடியில் சப்தஸ்வரங்களும் தேவதைகள்போல கைக்கூப்பியபடி இருக்க அருகே பசுவும் கன்றும் உள்ளன. சுவாமிக்கு இருபுறங்களும் கந்தர்வக் கன்னியர் உள்ளனர். அதில் ஒருத்தி கூடையில் இருந்து பூவை எடுத்து பூசிப்பது போலவும், இன்னொருத்தி வணங்கிய நிலையிலும் உள்ளாள். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாதிச் சனி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வைகாசி மாதம் பௌர்ணமியன்று தேர்த் திருவிழா நடக்கிறது.[3]

அமைவிடம்[தொகு]

இக்கோயிலானது ஊத்தங்கரையில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், போச்சம்பள்ளி மற்றும் மொரப்பூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஒசூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 68-70.