கலப்புப் பண்பாட்டுக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலப்புப் பண்பாட்டுக் கோட்பாடு என்பது நாட்டுப்புறவியல் கோட்பாடுகளுள் ஒன்று.19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர்கள் மனிதனின் பண்பாடு பற்றி ஆராயத் தொடங்கின ர். எட்வர்ட் டெய்லரின் பரிணாம மானிடவியல் இத்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.ஆண்ட்ரூ லாங்க் எட்வின் சிட்னி ஹாட்லாண்டு போன்றோர் மனிதப் பண்பாடானது காட்டுமிராண்டி நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று நாகரிக நிலையை அடைந்தது என்ற அடிப்படையில் ஆய்வு செய்தனர்.இருபதாம் நூற்றாண்டளவில் மானிடவியலாளர்கள் ஒவ்வொரு பண்பையும் தனித்தனியே ஆராய ஆரம்பித்தனர்.