கர்பி இளைஞர் பண்டிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பி இளைஞர் திருவிழா
கர்பி ரிசோ-நிம்சோ ரோங் அஜே
கர்பி இளைஞர் விழாவின் நுழைவு வாயில்
நிகழ்நிலைசெயலில் உள்ளது
வகைகண்காட்சிகள், திருவிழாக்கள், இசை விழாக்கள்
நாட்கள்15-19 பிப்ரவரி
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்கர்பி மக்கள் மண்டபம், தரலாங்சோ
அமைவிடம்(கள்)திபு, கர்பி ஆங்கலாங்கு, அசாம்
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1974 ம் ஆண்டு முதல்
நிறுவனர்கர்பி பண்பாட்டுச் சங்கம்
மிக அண்மைய2022 [1]
முந்தைய நிகழ்வு2021
அடுத்த நிகழ்வு2023
பங்கேற்பவர்கள்ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர்
வருகைப்பதிவுலட்சக்கணக்கானோர்
பரப்பு~500 ஏக்கர் (2 கி மீ2 (தற்போது விரிவடைந்து வருகிறது)
செயல்பாடுபாடல் மற்றும் நடன (பாரம்பரிய மற்றும் நவீன வடிவம்) போட்டிகள், விளையாட்டு போட்டிகள்
கர்பி பண்பாட்டுச் சங்கம்
வலைத்தளம்
கர்பி இளைஞர் திருவிழா

கர்பி இளைஞர் பண்டிகை என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் கர்பி மக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும். வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் பிற பழங்குடியினரும் அவ்வப்போது இணைந்து கொண்டாடபடும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் பழமையான இன விழாவாக கருதப்படுகிறது.[2] இவ்விழாவை கர்பி கலாச்சார சங்கம் (KCS) ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இவ்விழா கர்பி ரிசோ-நிம்சோ ரோங் அஜே என்று கற்பி மொழியில் அழைக்கப்படுகிறது.[3][4]

ஆண்டு விழா[தொகு]

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள திபு நகரில் உள்ள தரலாங்சோவில் உள்ள கர்பி மக்கள் மையத்தில் (கேபிஎச்) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-19 தேதிகளில் இவ்விழா நடத்தப்படுகிறது.இத்திருவிழா பொதுவாக ஒரு வாரம் நடைபெறும். இதில் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகள் போன்ற பல்வேறு கர்பி கலாச்சார செயல்பாடுகளை உள்ளடக்கியது. கர்பி மக்கள் ஒன்று கூடி தங்கள் அடையாளத்தைக் கொண்டாடுவதற்காகவும் , கர்பி சமூகத்தின் கலாச்சாரத்தைப் பற்றி பிற இனக்குழுக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மண்டல திருவிழாக்கள்[தொகு]

ஜோனல் கர்பி இளைஞர் விழா (ZKYF) எனப்படும் சிறிய திருவிழாக்கள் அந்தந்த பகுதிகளில் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில்,[5] திபு நகரில் உள்ள தரலாங்சோவில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவிற்கு முன்பதாக,  கொண்டாடப்படுகின்றன.

காட்சியகம்[தொகு]

நோதெங்பி கட்டிடம்
தரலாங்சோவில் உள்ள ரங்சினா சர்போ சிலையைக் காட்டும் படம்
தரலாங்சோவில் உள்ள தோங் நோக்பே சிலையைக் காட்டும் படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "கர்பி இளைஞர் திருவிழாவின் 48வது பதிப்பு தொடங்குகிறது".
  2. Desk, Sentinel Digital (2021-02-17). "47th edition of Karbi Youth Festival underway in Karbi Anglong district - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
  3. "Karbi Youth Festival, 2015". The Mileage. 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  4. "KYF history". Karbianglong.gov.in.
  5. "27th Havar Karbi Riso Nimso Rong Aje concludes". 9 October 2019. Archived from the original on 4 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்பி_இளைஞர்_பண்டிகை&oldid=3928641" இலிருந்து மீள்விக்கப்பட்டது