கருங்கடல்–காசுபியன் புல்வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருங்கடல்-காஸ்பியன் புல்வெளி என்பது கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல்களுக்கு இடையில் தெற்கே நீண்டுள்ள யுரேசியப் புல்வெளிக்கான ஒரு முறைசாராப் பெயராகும். இது பொதுவாக போன்டிக்-காஸ்பியன் புல்வெளியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, இது கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல்களுக்கு வடக்கே உள்ள பகுதியை உள்ளடக்கியது. ஆனால், இதை ஒரு தனித்துவமான இடமாக கருதுவதற்கு சில காரணங்கள் உள்ளன. அதன் இயற்கையான எல்லைகளாக அசோவ் கடல் மற்றும் கருங்கடல் மேற்கிலும், காகசஸ் மலைகள் தெற்கிலும் காஸ்பியன் கடல் கிழக்கிலும் அமைந்துள்ளன. [1]வடக்கு எல்லையானது டான் நதி மற்றும் வோல்கா நதி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட முக்கோணமாக இருக்கலாம். இது ஏறத்தாழ   வோல்கோகிராட்டின் மேற்கே 60 கி.மீ அளவிற்கு இருக்கலாம். காகசஸின் வடக்கு சரிவானது புல்வெளியாக இல்லாமல் இருப்பதாலும், தனித்துவமான புவியியல் மற்றும் வரலாற்றைக் கொண்டிருப்பதாலும் அது இங்கு குறிப்பிடப்படவில்லை. [2]

நிலவியல்[தொகு]

நிர்வாக ரீதியாக அது (கடிகார சுழல் திசையில்) வோல்காவோடு அஸ்திரகான் மாகாணம், கால்மீக்கியா (அஸ்திரகான் மாகாணத்தின் மேற்கே மற்றும் வோல்காவிற்கு தெற்கில் காஸ்பியன் கடல் வரையிலும் இது சேர்கிறது), மத்திய தெற்கில் வடக்கு தாகெஸ்தான், ஸ்தாவ்ரபோல் பிரதேசம், மேற்கில் கிராஸ்னதார் பிரதேசம், அந்நிய ஆதிக்கத்திற்குட்பட் அடிகேயா, வடமேற்கில் தெற்கு ரசுத்தோவ் மாகாணம், மத்திய வடக்கில் தெற்கு வோல்கோகிராட், தொன்-மீது-ரசுத்தோவ், வோல்கோகிராட், வடக்கில் அஸ்திரகான் மற்றும் தெற்கில் கிராஸ்னோடர் மற்றும் ஸ்டாவ்ரோபோல் ஆகியவை மிகப்பெரிய நகரங்கள் ஆகியவை ஆகும். முக்கிய சாலைகளாவன ரோஸ்டோவ் தென்கிழக்கு முதல் ஸ்டாவ்ரோபோல் வரை மற்றும் அதற்கு அப்பால், வோல்கோகிராட் தெற்கு முதல் ஸ்டாவ்ரோபோல் வரை மற்றும் அஸ்திரகான் தெற்கே தாகெஸ்தான் ஆகியவை ஆகும். இரு கடற்கரைகளுக்கும் இணையாக தொடருந்து பாதைகளும் உள்ளன.

இப்பகுதி சுமார் 900 கிலோ மீட்டர் ஆகும். இதன் அகலமானது வடக்கிலிருந்து தெற்காக சுமார் 500 கி.மீ ஆகும். குறைந்த மழைப்பொழிவானது இப்பகுதி முழுவதையும் புல்வெளியாக மாற்றுகிறது. கிழக்கு மற்றும் வடக்கே மழைப்பொழிவு குறைகிறது (மேற்கில் 20-30 அங்குலங்கள், வோல்கோகிராட்டில் 13 அங்குலங்கள் மற்றும் அஸ்திரகானில் 9 அங்குலங்கள்). பெரும்பாலான பகுதி கடல் மட்டத்திலிருந்து 500 அடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது, இது ஸ்டாவ்ரோபோல் மேட்டுநிலத்தில் 1000 அடிக்கு மேல் உயரத்தைக் கொண்டுள்ளது. மன்ச் இறக்கத்தில் கடல் மட்டத்திலிருந்து 65 அடி அளவிற்கானதும் மற்றும் அஸ்திரகானைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் கால்மீக்கியாவின் ஒரு பகுதி கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது.

ஆறுகள்[தொகு]

இந்நிலப்பகுதியின் மையத்தின் வழியாக வடமேற்கு-குமா-மானிச் தாழ்நிலம் அமைந்துள்ளது. இது ஒரு காலத்தில் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல்களை இணைக்கும் ஒரு நீர்ச்சந்தியாக இருந்தது. இப்போது இது மானிச் நதியால் குறிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் ஏரிகளின் சங்கிலியாகும். எப்போதாவது மிகப்பெரிய பொறியியல் பணிகள் நடந்து ஒரு கட்டுமானம் கட்டப்பட்டால் அது யூரேசியா கால்வாயின் பாதையாக இருக்கும். தெற்கில் காகசஸிலிருந்து வடக்கே பாயும் ஆறுகள் மேற்கு நோக்கி பாயும் குபன் நதி மற்றும் கிழக்கு நோக்கி பாயும் டெரெக் நதி ஆகியவற்றோடு இணைகின்றன. இவற்றுக்கு இடையில் டெரக்கின் கிழக்கு நோக்கிப் பாயும் துணை நதியான மல்கா நதியுடனும் ஆறுகள் இணைகின்றன. மேற்கில், காகசஸ் மலைகள் கருங்கடல் கடற்கரைக்கு இணையாகவும் நெருக்கமாகவும் அமைந்திருப்பதால், இந்தப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க நதிகள் எதுவும் கருங்கடலை அடையவில்லை. மேற்கு முனையில் தமன் தீபகற்பம் அமைந்துள்ளது. தமன் தீபகற்பத்தின் வடக்கே குபன் நதி, பெய்சுக் நதி மற்றும் யேயா நதிகள் அசோவ் கடலை அடைகின்றன. மேலும், நீண்ட மானிச் நதியும் குறுகிய சால் நதியும் கீழ் டானை அடைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Black Sea Geography".
  2. "Grassland of the world, The Russian Steppe". Archived from the original on 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.