கதிர்மூலம் அச்சுத் தொலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர்மூலம்- அச்சுத் தொலைவு (Source- axis distance-SAD) என்பது தொலைக்கதிர் மருத்துவத்தின் போது கதிர்மூலத்திற்கும் கருவியின் சுழல் அச்சிற்கும் உள்ளத் தூரமாகும். கதிர்புலத்தின் மைய அச்சு கருவியின் சுழல் அச்சு, நோயாளி இருக்கும் மேசையின் சுழல் அச்சு ஆகிய மூன்றும் ஒரே புள்ளியில் கூடுகின்றன. இப்புள்ளி ஒரேமையப்புள்ளி (Isocenter ) எனப்படுகிறது. கதிர் மூலத்திற்கும் ஒரேமையப் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் கதிர்மூலம் அச்சுத் தொலைவு எனப்படுகிறது. ஒரேமையப் புள்ளியில் புற்று இருக்குமாறு செய்து சுழல் மருத்துவம், வில் மருத்துவம் போன்ற முறைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.