கதாசிரத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதாசிரத்தம்
இயக்கம்கிரீசு காசரவள்ளி
தயாரிப்புசதானந்த சுவர்ணா
கதையு.ஆர்.ஆனந்தராமமூர்த்தி
திரைக்கதைகிரீசு காசரவள்ளி
இசைபி.வி.கரந்து
நடிப்புமீனா குட்டப்பா
அஜித் குமார்
நாராயண பட்
ஒளிப்பதிவுஎஸ்.இராமச்சந்திரா
படத்தொகுப்புஉமேசு குல்கர்ணி
விநியோகம்சுவர்ணகிரி பிலிம்சு
வெளியீடு1977
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கதாசிரத்தம் (The Ritual) என்பது 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய கன்னட மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கிரீசு காசரவள்ளி இயக்கியுள்ளார். மீனா குட்டப்பா, நாராயண பட் மற்றும் அஜித் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் உ.இரா அனந்தமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகும்.. இயக்குநராக கிரீசு காசரவள்ளி பணியாற்றிய முதல் திரைப்படம் இதுவாகும். இது ஒரு நம்பிக்கைக்குரிய புதிய திரைப்பட இயக்குனரின் வருகையை குறிக்கும் படம் மட்டுல்ல, இந்தியாவின் கன்னட சினிமாவை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு புதுமை இயக்குனரின் படமும் ஆகும்.. [1]

இந்தத் திரைப்படம் 1977 ஆம் ஆண்டின் திரைப்படங்களுக்காக வழங்கப்பட்ட 25வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. இது சிறந்த திரைப்படம், சிறந்த இசை இயக்கம் ( பி.வி. காரந்த் ) மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் (அஜித் குமார்) ஆகிய விருதுகளை வென்றது.

2002 ஆம் ஆண்டில், சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 100 பேர்களில் பாரீஸ் தேசிய ஆவணக் காப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் கதாசிரத்தம் ஆனது. [2] [3] 2009 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 1.6 மில்லியன் வாக்குகளைப் பெற்று இந்திய சினிமாவின் 20 சிறந்த படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. [4] [5]

கதைச்சுருக்கம்[தொகு]

உடுபா (ராமசுவாமி ஐயங்கார்) ஒரு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு வேத பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியில் பயிலும் கட்டுப்பாடற்ற மற்றும் கட்டுக்கடங்காத மாணவர்களைத் தவிர, ஏற்கனவே விதவையான தனது இளம் மகள் யமுனாவும் (மீனா குட்டப்பா) இவருடன் வசிக்கிறார். தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி சிறுவன் நானி (அஜித் குமார்) புதிய மாணவனாக பள்ளியில் வந்து சேர்கிறான்.

வீட்டு நினைவாகவே உள்ள நானிக்கும் யமுனாவுக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு உருவாகிறது. யமுனாவுக்கு ஏற்கனவே ஒரு காதலன் உண்டு. அவன் பள்ளி ஆசிரியன். அவனை இவள் இரகசியமாக சந்திக்கிறாள். இவளும் அவனால் கருவுருகிறாள்.

உடுபா தனது சிதிலமடைந்த பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக வெளியூர் செல்கிறார். அப்போது, பள்ளியில் நடவடிக்கைகள் கைமீறிப்போகிறது. மாணவர்கள் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள், யமுனா கருவுற்ற செய்தி கிராமம் முழுவதும் பரவுகிறது.

ஆச்சாரமிக்க கிராம உறுப்பினர்கள் யமுனாவை கிராமத்தைவிட்டு வெளியேற்றுகிறார்கள். அவள் காதலன் யாருக்கும் தெரியாமல் கருவைக் கலைத்து விடுகிறான்.

உடுபா திரும்பி வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறார். இவ்வளவு நடந்த பிறகும், இக்கிராமத்தில் நானி மட்டுமே யமுனாவை உறுதியாக ஆதரிக்கிறான். அவனது தந்தை நீண்ட காலமாகியும், அவனை அழைத்துச் செல்ல வரவில்லை. யமுனா மொட்டையடித்து, ஒரு ஆலமரத்தடியில் கைவிடப்பட்டாள்.

நடிகர்கள்[தொகு]

  • யமுனாவாக மீனா குட்டப்பா
  • நாராயண பட் சாஸ்திரியாக
  • நானியாக அஜித்குமார்
  • ராமகிருஷ்ணா
  • சாந்தா
  • ராமசுவாமி ஐயங்கார்
  • ஜகந்நாத்
  • பி. சுரேஷ்
  • எச்.எஸ்.பார்வதி

தயாரிப்பு[தொகு]

கிரீஷ் காசரவள்ளி நாடகக் கலைஞர் கே.வி.சுப்பண்ணா மூலம் கதாசிரத்தம் கதை உரிமைக்காக உ.இரா.அனந்தமூர்த்தியை அணுகினார். அப்போது அமெரிக்காவில் இருந்த அனந்தமூர்த்தி, இந்தியா திரும்பியதும் காசரவள்ளியிடம் திரைக்கதையைக் கேட்டு அனுமதி அளித்தார். அவரது முன்னாள் மாணவி மீனா குட்டப்பா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [6]

விருதுகள்[தொகு]

25வது தேசிய திரைப்பட விருதுகள்
1977–78 கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "southasiancinema". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.
  2. "Asiatic Film Mediale". asiaticafilmmediale.it. Archived from the original on 16 November 2008.
  3. "Girish Kasaravalli to be felicitated". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/girish-kasaravalli-to-be-felicitated/article1765035.ece. 
  4. "Ghatashraddha, one of the 20 best movies". http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Ghatashraddha-one-of-the-20-best-movies/articleshow/5297716.cms. 
  5. "A journey in reels". https://www.thehindu.com/entertainment/music/a-film-festival-organised-to-celebrate-the-70th-birthday-of-girish-kasaravalli/article30185472.ece. 
  6. "Ghatashraddha was ideal for a movie: Girish Kasaravalli". The Times of India. 23 August 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Ghatashraddha-was-ideal-for-a-movie-Girish-Kasaravalli/articleshow/40754321.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:NationalFilmAwardBestFeatureFilmவார்ப்புரு:Girish Kasaravalli

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாசிரத்தம்&oldid=3433193" இலிருந்து மீள்விக்கப்பட்டது