கண்ணி (கோட்டுருவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனை 1 இல் கண்ணியுள்ள ஒரு கோட்டுரு
ஒரேயொரு முனைகொண்ட கோட்டுருவில் கண்ணிகள்

கோட்டுருவியலில், கண்ணி (loop, self-loop, "buckle") என்பது ஒரு முனையை அதனுடையே இணைக்கும் விளிம்பாகும். எளிய கோட்டுருக்களில் கண்ணிகள் இருக்காது.

தேவைப்படும் சூழலுக்கு ஏற்ப ஒரு கோட்டுரு அல்லது பல்கோட்டுருவை கண்ணிகளை அனுமதித்தோ அல்லது அனுமதிகாமலோ வரையறுத்துக் கொள்ளலாம்:

  • கன்ணிகள் மற்றும் பல்விளிம்புகளை அனுமதித்து கோட்டுருக்கள் வரையறுக்கப்பட்டால், கண்ணிகளோ பல்விளிம்புகளோ இல்லாத கோட்டுருக்கள் "எளிய கோட்டுரு"க்கள் என அழைக்கப்படும்.
  • கன்ணிகள் மற்றும் பல்விளிம்புகளை அனுமதிக்காது கோட்டுருக்கள் வரையறுக்கப்பட்டால், இவ்வரையறையை நிறைவுசெய்யும் கோட்டுருக்களிலிருந்து கண்ணிகள் மற்றும் பல்விளிம்புகள் கொண்ட கோட்டுருக்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு அவை "பல்கோட்டுரு"க்கள் என அழைக்கப்படும்.

ஒரேயொரு முனைகொண்ட கோட்டுருவில் அனைத்து விளிம்புகளுமே கண்ணிகளாக அமையும்.

படி[தொகு]

திசையற்ற கோட்டுருவில், ஒரு முனையின் படி என்பது அதன் அடுத்துள்ள முனைகளின் எண்ணிக்கையாகும். ஒரு கண்ணி அமையும் முனையின் படி இரண்டாகக் கணக்கிடப்படுகிறது.

திசையுள்ள கோட்டுருவில் ஒரு கண்ணி அமையும் முனைக்கு உள் படி ஒன்று என்றும் வெளிப் படி என்றும் கணக்கிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • Black, Paul E. "Self loop". Dictionary of Algorithms and Data Structures. NIST.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணி_(கோட்டுருவியல்)&oldid=2994028" இலிருந்து மீள்விக்கப்பட்டது