கடைசல் இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடைசல் இயந்திரம் என்பது மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
| எண் | காலம் | இயக்கமுறை |
|---|---|---|
| 1. | பண்டைக்காலம் (கி.மு.1300) | இருமனிதர்கள் (manual) |
| 2. | இடைக்காலம் (கி.பி.1600) | வணரி (crank or pedal) |
| 3. | தொழிற்புரட்சி (கி.பி.1900) | பொறி (engine) |
| 4. | கி.பி.1920 | மின்னோடி (motor) |
| 5. | கி.பி.1950 | பணிப்பியங்கி (servo mechanism) |
[தொகு] உருவங்கள்
- உருளை (cylinder)
- கூம்பு (cone)
- கோளம், பந்து (sphere)
[தொகு] எந்திர வினைகள்
இதன் மூலம் செய்யக்கூடிய வினைகள்:
- கடைதல் (turning)
- முகக்கடைதல் (face turning)
- கூம்புதல் (tapering)
- துளையிடுதல் (drilling & boring)
- மரையிடுதல் (threading)
- பொளைதல் (knurling)
- காடி எடுத்தல் (grooving)
- மூலை மழுக்குதல் (chamfering or filleting)
- சீராக்குதல் (finishing)
[தொகு] பாகங்கள்
- தளம் (bed & base)
- தலைப் பகுதி (head stock)- சுழலியை சுழற்றும் இயங்குகருவிகள் உள்ள பகுதி.
- சுழலி (spindle)- பிடிப்பியை பொருத்துமிடம்.
- பிடிப்பி (chuck)- மூலப்பொருளை கவ்விக்கொள்ளும் கருவி.
- பின் தாங்கி (tail stock) - மூலப்பொருளை தாங்கவோ துளைகருவியை பிடிக்கவோ உதவுமிடம்.
- கருவிப்பீடம் (tool rest) - கருவிகளை தாங்கிப்பிடிக்குமிடம்.
- திருகேற்றி (lead screw) - கருவிப்பீடத்தின் அசைவுகளை கட்டுப்படுத்தும் கருவி.
[தொகு] வகைகள்
- 1.மர உருளுருவாக்கி (Woodworking lathes)
- 2.உலோக உருளுருவாக்கி(Metalworking lathes)
-
- 2.1.சுழல்படுகை உருளுருவாக்கி (turret lathe)
- 2.2.நங்கூரவுருளை உருளுருவாக்கி (capstan lathe)
- 2.3.க.எ.க. உருளுருவாக்கி(க.எ.க.-கனிணி என் கட்டுப்பாடு) (CNC lathe)
- 2.4.பகுதானியங்கி உருளுருவாக்கி (semi automatic)
- 3.கண்ணாடி உருளுருவாக்கி (Glassworking lathes)
- 4.தகர உருளுருவாக்கி (Metal spinning lathes)
- 5.ஆபரண உருளுருவாக்கி (Ornamental turning lathes)
- 6.கடிகார உருளுருவாக்கி (Watchmaker's lathes)
- 7.திருகுருவாக்கி (screw lathe)
[தொகு] வெளி இணைப்புகள் காணொளி
இவ்வெளி இணைப்பின் வலப்பக்கம் வரும் காணொளிகள் அனைத்தும் இவ்வெந்திரம் தொடர்பானதே.