கடன் வசூல் தீர்ப்பாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களை மீட்பதற்கு (1993 51 ACT) நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் இந்திய அரசு நிறுவப்பட்டுள்ள அமைப்பே கடன் வசூல் தீர்ப்பாயம். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் வாராக்கடனாக ஆகும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்க இந்த தீர்ப்பாயம் நிறுவப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

வங்கிகளில் அதிகமாகும் கடனாக இருக்கும் NPA எனப்படும் செயல்படா சொத்துக்களைக் குறிக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் திவாரி குழுவொன்றை அமைத்து, மற்றும் மு நரசிம்மன், ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் வி எஸ் ஹெக்டே தலைமையில் உயர் மட்ட குழு அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்கள் சட்டம், 1993 மூலம் 24ஆம் தேதி ஜூன் மாதம் 1993ஆம் வருடம் பிரகடனப்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்_வசூல்_தீர்ப்பாயம்&oldid=3480556" இலிருந்து மீள்விக்கப்பட்டது