ஓரை (வானியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரை மாதம்
12 ஓரைமீன்

பண்டைய வானியலில் ஓரை என்பது பல விண்மீன் தொகுதிகள் அடங்கிய விண்மீன் குடும்பத்தைக் குறிக்கும். ஓரை எனபது தமிழ். 'ராசி' என்பது வடசொல். zodiac என்பது இதன் ஆங்கில வடிவம்.[1] ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி மறையும் மீன்குடும்பம் இது. இதனைக் கொண்டு ஓர் ஆண்டின் கால அளவையை 12 கூறுகளாகப் பகுத்து ஒவ்வொன்றையும் ஒரு மாதம் என்றனர்.

ஓரைமீன் பாகுபாட்டையும், நாள்மீன் பாகுபாட்டையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. zodiac
  2. மறைந்த ஒழுக்கத்து, ஓரையும் நாளும்
    துறந்த ஒழுக்கம், கிழவோற்கு இல்லை. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 133)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரை_(வானியல்)&oldid=2746358" இலிருந்து மீள்விக்கப்பட்டது