ஓரினோக்கோ மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரினோக்கோ பெட்ரோலியம் மண்டலம்
ஓரினோக்கோ எண்ணெய் மதிப்பீடு அலகு, USGS
நாடுவெனிசுவேலா
அமைவிடம்குயாரிகோ, அன்சுவாடெகி, மோனாகேசு, டெல்ட்டா அமாகுரோ
கடலில்/கரையில்கரைமேல்
இயக்குபவர்பெட்ரோலியோசு டெ வெனிசூவேலா நிறுவனம்
பங்காளிsபெட்ரோலியோசு டெ வெனிசூவேலா நிறுவனம், செவ்ரோன் நிறுவனம், ரெப்சோல் YPF, மிட்சுபிசி நிறுவனம், இன்பெக்சு, சுயெலோபெட்ரோல், எனி, பெட்ரோவியத்நாம், பெட்ரோனாஸ், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஆயில் இந்தியா, சீனா தேசிய பெட்ரோலியம் நிறுவனம், ரோசுனெப்ட், காசுப்ரோம் நெஃப்ட், லுக்காயில், டிஎன்கே-பிபி]], சுர்குட்னெப்ட்கேசு
Field history
தயாரிப்பு துவக்கம்2013 (எதிர்பார்ப்பு)
Production
Estimated oil in place12,00,000 Mbbl (~1.6×10^11 t)

ஓரினோக்கோ மண்டலம் (Orinoco Belt) வெனிசுவேலாவின் ஓரினோக்கோ ஆற்றுப் படுகையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலப்பகுதியாகும். உலகில் மிகுந்த அளவில் பாறை எண்ணெய் வைப்புகள் உள்ள இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதன் உள்ளூர் எசுப்பானியப் பெயர் ஃபாகா பெத்ரோலிபெரா டெல் ஓரினோக்கோ (Faja Petrolífera del Orinoco) என்பதாகும்.

ஓரினோக்கோ மண்டலம் குயாரிகோ மாநிலத்திலும் அன்சுவாடெகி, மோனாகேசு, டெல்ட்டா அமாகுரோ மாநிலங்களுக்கு தெற்கிலும் ஆற்றின் போக்கையொட்டியும் அமைந்துள்ளது. இது கிழக்கு மேற்காக ஏறத்தாழ 600 கிலோமீட்டர்கள் (370 mi) தொலைவிற்கும் வடக்குத் தெற்காக 70 கிலோமீட்டர்கள் (43 mi) தொலைவிற்குமாக 55,314 சதுர கிலோமீட்டர்கள் (21,357 sq mi) பரப்பில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரினோக்கோ_மண்டலம்&oldid=2062719" இலிருந்து மீள்விக்கப்பட்டது