ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம்
Oman Children's Museum
Map
நிறுவப்பட்டது1990
அமைவிடம்சுல்தான் கபூசு தெரு, மசுகட்டு ஓமான்
வகைகுழந்தைகள் மனித அறிவியல் அருங்காட்சியகம்
மேற்பார்வையாளர்சமிரா அகமது அல் ரைசி

ஓமன் குழந்தைகள் அருங்காட்சியகம் (Oman Children's Museum) என்பது ஒரு குழந்தைகள் அறிவியல் அருங்காட்சியகமாகும். ஓமான் நாட்டின் மசுகட்டில் குரம் இயற்கை பூங்காவிற்கு அருகே சுல்தான் கபூசு தெருவில் வெள்ளை குவிமாடம் கொண்ட கட்டிடத்தில் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம் ஓமான் நாட்டின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று ஓமானில் 20 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தில் சுல்தான் கபூசு பின் சைத் அல் சையினால் திறக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் 45 கண்காட்சிகள் மற்றும் இரண்டு விளக்கக் காட்சிகள் உள்ளன. அருங்காட்சியகம் 10,000 சதுர அடிகள் (930 m2) பரப்பளவு கொண்டுள்ளது. . ஓமானின் முதல் அறிவியல் அருங்காட்சியகமான இங்கு ஆண்டுதோறும் சுமார் 50,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.[1] [2] அருங்காட்சியகம் தற்போது முன்னாள் பள்ளி ஆசிரியரான சமிரா அகமத் அல் ரைசி என்பவரால் நடத்தப்படுகிறது, இவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார்.

இந்த குழந்தைகள் அருங்காட்சியகம் மனித வாழ்வின் அறிவியல் முறைகளை எடுத்துரைக்கிறது. கண்காட்சி பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது; மனித வாழ்க்கை, இயற்பியல் மற்றும் அவதானிப்பு என்பவை அம்மூன்று பகுதிகளாகும். இது காலங்காலமாக அறிவியலின் முன்னேற்றத்தை ஆராய்கிறது. [3]

அருங்காட்சியகத்தில் பல செயல்முறைக் காட்சிகள் உள்ளன. போலி மின்சார அதிர்ச்சி, மின்னலைத் தூண்டுதல், சூடான காற்று பலூனை ஏவுதல், உங்கள் சொந்த நிழலைப் படம்பிடித்தல் மற்றும் இரகசிய வட்டு மூலம் செய்தி அனுப்புதல் போன்ற அனுபவங்களும் இதில் அடங்கும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oman Children's Museum". Ontario Science Centre. Archived from the original on May 19, 2009. பார்க்கப்பட்ட நாள் January 18, 2009.
  2. 2.0 2.1 "Children's wonder world". Oman Observer. Archived from the original on May 9, 2008. பார்க்கப்பட்ட நாள் January 18, 2009.
  3. "Muscat Museums". Asiarooms.com. Archived from the original on December 20, 2008. பார்க்கப்பட்ட நாள் January 18, 2009.