ஒப்பத்தவாடி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பத்தவாடி பாறை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகில் உள்ள ஒப்பத்தவாடி[1] என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும். கிருட்டிணகிரியில் இருந்து பருகூர்-கனகமூர்ப் பேருந்து சாலையில், கனகமூர் கிராமச் சாலை வழியாகச் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேரலக்கோட்டை என்ற இடத்திற்கு அடுத்ததாக ஒப்பத்தவாடி உள்ளது. ஒப்பத்தவாடிக்கு அருகில் தோட்டியன் குட்டை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் குன்றில் உள்ள இரண்டு குகைகளில் பாறை ஓவியங்கள் உள்ளன. முதல் குகையில் இரண்டு தொகுப்பும், இரண்டாவது குகையில் மூன்று தொகுப்பும் என மொத்தம் ஐந்து தொகுப்புகளில் ஓவியங்கள் உள்ளன.[2] இங்குள்ள குகைகளில் உள்ள ஓவிய தொகுப்புகளில் மனித வடிவங்கள், விலங்கு வடிவங்கள், பறவை வடிவங்கள், பல விநோத குறியீடுகள் என இடம்பெற்றுள்ளன.

முதல் குகையில் குகையில் மேற்குப் புறம் பார்த்த பகுதியில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள மனித ஓவியங்கள் பல்வேறு வெளிப்பாட்டில் காட்டபட்டுள்ளன. விலங்கின் மீது அமர்ந்து அல்லது நின்ற வடிவங்கள், வாளும் கேடயமும் ஏந்திய வடிவங்கள், அம்பாரியில் மனித வடிவம், தனி மனிதர், தனி விலங்கு ஓப்னவை உள்ளன. இவை வெள்ளை வண்ணத்தால் ஆன கோட்டோவியங்கள் ஆகும்.

இரண்டாவது குகையில் மனித வடிவங்களும், விலங்கு வடிவங்களும், ஆயுதங்களும், குறியீடுகளும் இடம் பெற்றுள்ளன. இவை வெள்ளை வண்ணத்தால் ஆன கோட்டோவியங்கள் ஆகும். [2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. செல்வராஜ், பெருங் கற்படைக் காலம் (இரும்பு காலம் முதல் சங்ககாலம் வரை-4, கட்டுரை, தினமணி 11, திசம்பர், 2015
  2. 2.0 2.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். பக். 162-166.