ஐக்கிய அமெரிக்காவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திர தேவி சிலை

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 21 பாரம்பரியக் களங்கள் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன[1]. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 8 பண்பாட்டுக் களங்களும், 12 இயற்கைக் களங்களும், 1 கலப்பும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை ஐக்கிய அமெரிக்கா டிசம்பர் 7, 1973 இல் ஏற்றுக் கொண்டது[3]

வாசிங்டன், டி. சி.யில், செப்டம்பர் 5–8, 1978 நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் இரண்டாம் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள Mesa Verde National Park, Yellowstone National Park ஆகிய இரு இடங்களும், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து முதலாவது முறையாக உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[4]


படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Number of World Heritage properties inscribed by each State Party". யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 2012-10-01.
  2. Properties inscribed on the World Heritage List, United States of America
  3. States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO
  4. "Report of Rapporteur" (PDF). UNESCO. பார்க்கப்பட்ட நாள் September 14, 2012.