எஸ். கிறிஸ்டோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு.கிறிசுடோபர்
S Christopher
பிறப்புநாகர்கோவில், தமிழ்நாடு
பணிதலைவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
வாழ்க்கைத்
துணை
இரீட்டா கிறிசுடோபர்

செல்வின் கிறிசுடோபர் (Selvin Christopher) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாவார். நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இவர் பணியாற்றினார்.[1] முன்னதாக இவர் ஏர்போர்ன் சிசுடம்சு என்ற வான்வழி அமைப்புகள் மையத்தின் இயக்குநராக இருந்தார்.[2] பல்வேறு ஆய்வு வெளியீடுகளின் ஆசிரியராகவும் இருந்தார். தற்போது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் மின் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிறுவனம் தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனத்தில் அகில இந்திய தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நிறுவனமாகும்.

தொழில்[தொகு]

கிறிசுடோபர் இந்தியாவின் முதல் உள்நாட்டு வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு நிறுவனத்தின் உற்பத்தியை இயக்கிய பெருமைக்குரியவராக கருதப்படுகிறார்.[3] 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விருது - சிறந்த விஞ்ஞானி விருது உட்பட பல்வேறு சிறப்புமிக்க விருதுகளைப் பெற்றார்.[4] இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக 2015 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.[5] முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் என்று நியமிக்கப்பட்டாலும் பின்னர் இப்பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

கல்வி[தொகு]

கிறிசுடோபர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்றார். காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் நுண்ணலைகள் மற்றும் ரேடார் பொறியியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1980 ஆம் ஆண்டில் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட இணை இயக்குநராக பணியில் சேர்ந்தார். இங்கு நுண்ணலைகள் ஆண்டெனா வடிவமைப்பு மற்றும் அருகாமை புல அளவீடு ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தார். பின்னர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆண்டெனா மற்றும் அளவீட்டு நுட்பங்களில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு நிறுவனத்தின் உந்து சக்தியாக இருக்கிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Selvin Christopher is new Chief of DRDO". IndianMandarins. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
  2. "Defence Secretary of R&D; and Director General DRDO". www.drdo.gov.in. Archived from the original on 2016-08-08.
  3. Pubby, Manu. "Defence Min asks CBI to probe bribery allegations in DRDO-Embraer deal". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/defence-min-asks-cbi-to-probe-bribery-allegations-in-drdo-embraer-deal/articleshow/54338211.cms. 
  4. "PM Presents DRDO Awards" PDF, September 2012
  5. "Dr S Christopher, Secretary Department of Defence R&D".
  6. "S Christopher appointed DRDO chief". The Economic Times (Times of India). http://economictimes.indiatimes.com/news/defence/s-christopher-is-new-drdo-chief-heres-all-you-want-to-know-about-the-man-behind-indias-aewc/articleshow/47466720.cms. பார்த்த நாள்: 24 Sep 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கிறிஸ்டோபர்&oldid=3723799" இலிருந்து மீள்விக்கப்பட்டது