எலினோர் ரூசுவெல்ட்
| அன்னா எலினோர் ரூசுவெல்ட் | |
|
|
|
| பதவியில் திசம்பர் 31, 1946 – திசம்பர் 31, 1952 |
|
| சனாதிபதி | ஹாரி எஸ். ட்ரூமன் |
|---|---|
|
|
|
| பதவியில் 1946 – 52 |
|
| குடியரசுத் தலைவர் | ஜான் எஃப். கென்னடி |
| முன்னவர் | புதிய பதவி |
| பின்வந்தவர் | சார்லசு மாலிக் |
|
தலைவர்,பெண்கள் நிலை குறித்த குடியரசுத் தலைவரின் ஆணையம்
|
|
| பதவியில் 1961 – 62 |
|
| தலைவர் | ஜான் எஃப். கென்னடி |
| முன்னவர் | இல்லை |
| பின்வந்தவர் | எஸ்தர் பீடர்சன் |
|
|
|
| பதவியில் மார்ச்சு 4, 1933 – ஏப்ரல் 12, 1945 |
|
| தலைவர் | பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட் |
| முன்னவர் | லூ ஹென்றி ஹூவர் |
| பின்வந்தவர் | எலிசபெத் "பெஸ்" வாலஸ் ட்ரூமன் |
|
நியூயார்க் நகர முதல்பெண்மணி
|
|
| பதவியில் சனவரி 1, 1929 – திசம்பர் 31, 1932 |
|
| முன்னவர் | காதரின் ஏ. டன் |
| பின்வந்தவர் | எடித் லூயி அல்ட்சுல் |
| அரசியல் கட்சி | மக்களாட்சி |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 11, 1884 நியூயார்க், நியூ யார்க் ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | நவம்பர் 7 1962 (அகவை 78) நியூயார்க், நியூ யார்க் ஐக்கிய அமெரிக்கா |
| சமாதி | ஐட் பார்க், நியூயார்க் |
| வாழ்க்கைத் துணை |
பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட் |
| பிள்ளைகள் | அன்னா ரூசுவெல்ட் ஹல்ஸ்டெட், ஜேம்சு ரூசுவெல்ட், எலியட் ரூசுவெல்ட், பிராங்க்ளின் டெலனோ ரூசுவெல்ட் ஜூர்,ஜான் அஸ்பின்வால் ரூசுவெல்ட் |
| தொழில் | முதல் பெண்மணி, பேராளர், தன்னார்வலர் |
| சமயம் | எபிஸ்கோபல் |
| கையொப்பம் | |
அன்னா எலினோர் ரூசுவெல்ட் Anna Eleanor Roosevelt (ஒலிப்பு: /ˈɛlɨnɔr ˈroʊzəvɛlt/; அக்டோபர் 11, 1884 – நவம்பர் 7, 1962) 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக (ஆட்சியிலுள்ள குடியரசுத் தலைவரின் மனைவியாக) இருந்தவர்.தனது கணவர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்க்ளின் ரூசுவெல்ட்டின் "புதிய நடவடிக்கைகளை" ஆதரித்து அமெரிக்க குடியியல் உரிமைகளுக்காகப் போராடியவர்.1945ஆம் ஆண்டில் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகும் பன்னாட்டு அரசியலில் ஆர்வமுள்ளவராகவும் புதிய நடவடிக்கைகள் கூட்டணி ஆர்வலராகவும் இருந்து வந்தார். பல நூல்களை இக்காலத்தில் எழுதியுள்ளார்.வேலையிலுள்ளப் பெண்களின் நிலையை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார். இருப்பினும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அவர் கருதிய சம உரிமைச் சட்டத்தை எதிர்த்தார்.
1940களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக பெரிதும் துணை புரிந்தார். 1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஐ.நா உருவாக கருத்துருவாக்கத்திற்கு வழி செய்தார்.குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அவரை 1945 முதல் 1952வரை ஐ.நா வின் அமெரிக்கத் தூதராக நியமித்தார்.அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா வரைவுகளை மேற்பார்வையிட்ட குழுவின் தலைவராக இருந்து அவற்றைச் செம்மைப்படுத்த பெரும் பங்காற்றினார்.மனித உரிமைகள் குறித்த அவரது சாதனைகளைப் பாராட்டி ட்ரூமன் அவரை "உலகின் முதல் பெண்மணி" என்று பாராட்டினார்.[1]
1962ஆம் ஆண்டு எலும்பு மச்சை காசநோயால் தமது 78வது அகவையில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் மிகவும் வியக்கப்பட்டப் பெண்மணியாக விளங்கினார்.[1][2][3]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "First Lady of the World: Eleanor Roosevelt at Val-Kill". National Park Service. பார்த்த நாள் 2008-05-20.
- ↑ "Mother Teresa Voted by American People as Most Admired Person of the Century". Gallup's List of Widely Admired People (1999-12-31). பார்த்த நாள் 2008-05-20.
- ↑ Lash, Joseph P. (1971). Eleanor and Franklin. W.W. Norton & Company. pp. 48, 56, 57, 74, 81, 89–91, 108–10, 111–3, 145, 152–5, 160, 162–3, 174–5, 179, 193–6, 198, 220–1, 225–7, 244–5, 259, 273–6, 297, 293–4, 302–3. ISBN 1-56852-075-1.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: எலினோர் ரூசுவெல்ட் |
- White House Biography of Eleanor Roosevelt
- The Eleanor Roosevelt Papers Project (including over 8000 of her "My Day" newspaper columns, as well as other documents and audio clips)
- First Lady of the World: Eleanor Roosevelt at Val-Kill, a National Park Service Teaching with Historic Places (TwHP) lesson plan
- Some of My Best Friends Are Negro: Mrs. Roosevelt and her views on race.
- Online Biographical Sketch at George Washington University's Eleanor Roosevelt archival papers site
- Text and Audio of Eleanor Roosevelt's Address to the United Nations General Assembly
- The Truman Library's collection of correspondence between Eleanor Roosevelt and President Harry S. Truman.
- This Is My Story by Eleanor Roosevelt. (Her 1937 autobiography)