எபேசஸ்
எபேசஸ் என்பது துருக்கி நாட்டில் ஆசிய மைனரின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இந்த நகரத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இருந்தால் இதன் காலம் ஏறக்குறைய கி.மு.5 ஆம் நூற்றாண்டு என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு நகரமாக இருந்தது. பின் இந்த நகரம் ரோமன் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான வணிக நகரமாக விளங்கியது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களில் கீழ இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் இங்கே கலையம்சம் மிக்க கோவில்களும் பொது கட்டிடங்களும் இருந்திருக்கிறது. ஆனால் அவற்றில் பெரும்பகுதி சேதம் அடைந்து தற்போது ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே காணகிடைகின்றன. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக காட்சியளிக்கும் அகஸ்டஸ் நுழைவாயில், செல்சஸ் நூலகம், ஹாட்ரேயன் மதிற்சுவர் மற்றும் கோவில்போன்றவை எபேசஸ் நகரின் புராதன கிரேக்க கட்டிடக்கலைக்கு முக்கிய சான்றுகள் ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Ephesus தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |