எச். எஸ். பி. சி இளம் தொழில் முனைவாளர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச். எஸ். பி. சி இளம் தொழில் முனைவாளர் விருதுகள் 2011 என்பது தொழில் முயற்சிகளில் இலங்கை இளைஞர்களை ஊக்குவிக்குமுகமாக உலகின் தேசிய வங்கியான எச்.எஸ்.பி. சி 'பிரித்தானிய கவுன்ஸி'லுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள திட்டமாகும். பிரித்தானிய கவுன்ஸில் கடந்த காலங்களில் பல்வேறு பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் ஊடாக இலங்கையில் தொழில்சார் பட்டப்படிப்புக்கான முன் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் தொழில்சார் கல்வி மேம்பாட்டிற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை விருத்தி செய்வதற்காக அது உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றுடனும் பல்கலைக்கழக உப வேந்தர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுகின்றது.

நோக்கம்[தொகு]

திறமையுள்ள இளம் தொழில் முனைவாளர்களை இனங்காண்பதும் தொழில் முயற்சியை ஆரம்பித்து விருத்தி செய்ய அவர்களுக்கு உதவி வழங்குவதும்

தகைமை[தொகு]

இப்போட்டித் திட்டத்தில் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள், தனியார் உயர் கல்வி நிலையங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி நிலையங்கள், தொழில்சார் பயிற்சி நிலையங்கள் என்பவற்றைச் சேர்ந்த 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட முதுமானிப் பட்டதாரிகள், பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் பங்குபற்ற முடியும்.

பிரேரணைகள்[தொகு]

அவர்கள் பின்வரும் துறையொன்றில் தமது தொழிற் பிரேரணைகளைச் சமர்ப்பிக்கலாம்.

  • ஆடையலங்கார வடிவமைப்பு, கட்டடக்கலை, கைப்பணிக் கலைகள்
  • சுற்றுலாவும் அதனுடன் தொடர்புடைய துறைகளும்
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
  • மருத்துவம், மருந்து உற்பத்தி. உயிரியல் தொழில்நுட்பம்
  • பொறியியல்
  • விவசாயம்
  • மீள்பாவனைக்குரிய சக்தி வளங்கள் மற்றும் நிலைபெறுதகு கைத்தொழில்கள்
  • மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு துறைகள்

பரிசீலனை[தொகு]

ஒவ்வொரு துறையிலும் போட்டியாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் தொழிற் திட்டங்கள் யாவும் பிரபல தொழில் அதிபர்கள் மற்றும் கைத்தொழில் நிபுணர்கள் உள்ளடங்கிய தகுதி வாய்ந்த நடுவர்கள் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்படும். தரப்படுத்தலுக்கான நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பரிசு[தொகு]

ஒவ்வொரு துறையிலும் வெற்றியீட்டுபவருக்கு அல்லது வெற்றியீட்டும் அணிக்கு தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கான அடிப்படை மூலதனமாக ரூ. 100,000 வழங்கப்படும். அத்துடன், வெற்றியீட்டுபவர்கள் ஆறு மாதகாலத்திற்கு தொழில் நிபுணர்களின் வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் பெறுவார்கள்.