ஊலைட்ஸ்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கோளச் சுண்ணாம்புக்கல் அல்லது ஊலைட்ஸ் (Ooid) என்பது கோளகத்திலிருந்து துணை கோளகம் வரை மற்றும் மணலின் அளவுள்ள படிவுப் பாறை துகள்கள் ஆகும். இவை பொதுவாக கால்சியம் கார்பனேட்டு CaCo3 ஆல் உருவாக்கப்படுகிறது, இருந்த போதும் சில நேரங்களில் இரும்பு அல்லது பாஸ்பேட் சார்ந்த தாதுக்களால் உருவாக்கப்படுகிறது. ஒரே மையமுள்ள CaCo3 வளையங்கள் மற்றொரு துகள்களின் கரு மீது சுற்றி வீழ்ப்படிவதினால் உருவாக்கப்படுகிறது. கரு, கார்போனேட் துகளாகவும் இருக்கலாம் அல்லது மணல் துகளாகவும் இருக்களாம். கோளச் சுண்ணாம்புக்கல் பொதுவாக கடல் தரையில் அமைந்திருக்கின்றன. பொதுவாக ஆழம் குறைந்த வெப்பமண்டல கடல்களில் உருவாக்கப்படுகிறது (பஹாமாவை சுற்றி, அல்லது பாரசீக வளைகுடாவில்). இந்த வகையான சுண்ணாம்புக்கல்கள் உருவாகிய பிறகு, பாறை உருப்பெறல் நடைபெற்றதன் பிறகு பாறையாக மாறுகின்றது. அதிகப்படியான கோள சுண்ணாம்புக்கல் 0.2மி.மீ.யில் இருந்து 0.5மி.மீ.[1] வரை விட்டம் கொண்டதாக இருக்கும்.
சான்றாதாரம்
[தொகு]- ↑ Applied sedimentology by R.K. Sukhtankar
மேற்கோள்கள்
[தொகு]Flügel, Erik (2010), Microfacies of Carbonate Rocks: Analysis, Interpretation and Application, 2nd ed., Springer, pp. 242–244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03795-5. Accessed 2014-06-23.