ஊர்மிளா சத்தியநாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்மிளா சத்தியநாராயணா
பிறப்பு08 ஜனவரி 1966 (55 அகவை)
சென்னை, தமிழ்நாடு
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பரதநாட்டியக் கலைஞர்
இசைத்துறையில்1976 ஆம் ஆண்டிலிருந்து
உறுப்பினர்கள்சம்யுக்தா சத்தியநாராயணா (மகள்)

ஊர்மிளா சத்தியநாராயணா, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும் பரதநாட்டிய ஆசிரியையுமாவார். இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரான இவர், சங்கல்பா என்ற பெயரில் சென்னையில் பரதநாட்டியம், இசை மற்றும் யோகா பயிற்சி அளிக்கும் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இசைப் பள்ளியையும் நடத்திவருகிறார். [1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ஊர்மிளா சத்யநாராயணா, புகழ்பெற்ற நடனக் குருக்களான 'பத்மஸ்ரீ' கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, கலைமாமணி கே.ஜே.சரசா மற்றும் பத்மபூஷன் கலாநிதி நாராயணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார். அவரது மிருதுவான மற்றும் துல்லியமான கால் வேலைப்பாடு, முகபாவங்களின் தன்னிச்சை மற்றும் விறுவிறுப்பு, அழகான தோரணைகள் போன்றவைகளால் பார்வையாளர்களை வசீகரிக்கும் ஊர்மிளாவின் முத்திரையாக அரைமண்டி தோற்றம் காணப்படுகிறது.

தொழில்முறை நாட்டியம்[தொகு]

ஊர்மிளா, தனது ஐந்து வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்று வந்துள்ளார். மேலும் தனது பத்தாவது வயதில் முதன்முறையாக மேடையேறி அரங்கேற்றமும் செய்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொழில்முறை நடனக்கலைஞராக நடனமாடி வரும் இவர், இந்தியா முழுவதும் நடைபெறும்  அனைத்து முக்கிய நடன விழாக்களிலும் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்த்தி வருகிறார், மேலும் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பரதநாட்டியம் ஆடி வருகிறார்.

  • 1997 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருது,[2]
  • 2001 ஆம் ஆண்டில், நிருத்ய சூடாமணி விருது
  • 2003 ஆம் ஆண்டில் தேசிய எமினன்ஸ் விருது
  • 2009 ஆம் ஆண்டில் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி வழங்கிய சிறந்த நாட்டியச்சார்யா விருது
  • 2010 ஆம் ஆண்டில், நடனத் துறையில் அவர் செய்த பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட்ட நாட்டிய கலாசிகாமணி உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.

நாட்டிய சங்கல்பம்[தொகு]

ஊர்மிளா, 1996 ஆம் ஆண்டு, சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் நாட்டிய சங்கல்பத்தைத் தொடங்கினார். இந்த நாட்டிய நிறுவனம், பரதநாட்டிய கலைஞரை உருவாக்குவதோடு, நடனம், கர்நாடக இசை மற்றும் யோகாவின் கோட்பாட்டின் அறிவை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டுவருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urmila Satyanarayana - exponent of Bharata Natyam". artindia.net. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  2. "Urmila Sathyanarayanan - Classical Dancer". Chennaiyil Thiruvaiyaru (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  3. "KANAKAVALLI VIGNETTES : Urmila Sathyanarayanan - Rhythm & Roots". Kanakavalli (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா_சத்தியநாராயணா&oldid=3684782" இலிருந்து மீள்விக்கப்பட்டது