ஊர்மிலா மடோண்ட்கர்
| ஊர்மிலா மடோண்ட்கர் | |
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 4, 1974 மும்பை, இந்தியா |
| தொழில் | நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் |
| நடிப்புக் காலம் | 1980 - 1991 - இன்று வரை |
ஊர்மிலா மடோண்ட்கர் மராட்டி: उर्मिला मातोंडकर (இந்தியா, மகாராஷ்டிரா, மும்பை நகரில் 1974வது வருடம் ஃபிப்ரவரி 4 அன்று பிறந்த) ஒரு இந்திய பாலிவுட் நடிகை.
மடோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1980வது வருடம் கலியுக் என்ற திரைப்படம் மூலமாகவும், வயது வந்தவராக நரசிம்மா என்ற திரைப்படத்திலும் துவக்கினார். அவர் ரங்கீலா (1995), ஜுதாயி மற்றும் சத்யா (1998) ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டினார். இவை அனைத்துமே அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. தீவிரமான நாகரிகப் பாணி மற்றும் நடனத் திறமை ஆகியவற்றிற்காக பெரும் அளவில் அறியப்பட்ட அவர், பல நேரங்களில் "பாலியல் குறியீடு" என்றே இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டார்; அவரது அத்தகைய பொதுவாழ்வுப் பிம்பத்தையும் இந்தக் கதாபாத்திரங்கள் மாற்றின.[1][2][3][4]
இதைத் தொடர்ந்து உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த கோன் (1999), தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த ப்யார் துனே க்யா கியா (2001), ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பூத் மற்றும் இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த ஏக் ஹசினா தி (2004) ஆகியவை அடங்கும். பூத் திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர் "சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்; மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான தேஜீப் (2003), பிஞ்சர் (2003) மைனே காந்தி கோ மாரா (2005) மற்றும் பஸ் ஏக் பல் (2006) ஆகியவற்றிலும் நடித்தார்.
பொருளடக்கம் |
[தொகு] தொழில் வாழ்க்கை
அவர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். அவரது ஆரம்ப காலப் படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது ஷேகர் கபூரின் 1983வது வருடத்திய மாசூம் திரைப்படம்.
வயது வந்த நடிகையாக "படே கர் கி பேட்டி" என்னும் திரைப்படத்தின் மூலம் தமது திரைவாழ்க்கையை அரங்கேற்றினார். இதன் பிறகு அவர் ஷாருக்கான் ஜோடியாக சமத்கார் என்னும் கட்டற்ற கற்பனைத் திரைப்படத்தில் நடித்தார்.
தமது கிளர்ச்சியூட்டும் மர்மப் படங்களுக்காக மிகவும் அறியப்பட்ட ராம் கோபால் வர்மா என்னும் திரைப்பட இயக்குனருடன் அதிகப் படங்களில் அவர் இணைந்து பணியாற்றினார். அவருடன் இணைந்து ஊர்மிலா பணியாற்றிய முதல் படம் அந்தம் என்னும் தெலுங்குப் படமாகும். இது, 1992வது வருடம் துரோகி என்ற பெயரில் ஹிந்தியில் மறு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமது முதல் பெரும் வெற்றிப் படமான தெலுங்குத் திரைப்படம் காயம் மற்றும் 1995 வருடத்திய இசைப் படமான ரங்கீலா போன்ற ஆர்ஜிவி பிக்சர்சின் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் ஒரு நட்சத்திரத்தின் விசிறியாக உள்ள நடனக்காரி வேடம் ஏற்றிருந்தார். இதற்காக அவர் தமது முதல் ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகை விருதுக்காகப் பரிந்துரைக்கப் பெற்றார். இதைத் தொடர்ந்து வந்த ஆர்ஜிவி திரைப்படங்கள் தௌட் (1997), சத்யா (1999), கோன் (1999), மஸ்த் (2000), ஜங்கிள் (2000), ப்யார் துனே க்யா கியா (2001), பூத் (2003) மற்றும் ஏக் ஹசினா தி (2004) ஆகியவையாகும்.
1997வது வருடம் அவர் நடித்த ஜுதாயி வெற்றி அடைந்தது; ஆனால், தௌட் , அஃப்லாடூன் போன்ற பிற வெளியீடுகள் அந்த அளவு வெற்றி பெறவில்லை.[5] அவரது நடிப்புத் திறன் அவருக்கு ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தது.[6]
1998வது வருடம் அவர் சத்யா திரைப்படத்தில் தமது நடிப்பிற்காக மற்றொரு ஃபிலிம்ஃபேர் பரிந்துரைப்பைப் பெற்றார். சத்யா விமர்சன ரீதியிலும் மற்றும் வணிக ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்தது.[7]
1999வது வருடம் மனப் பிறழ்வு அடைந்த நோயாளியாக நடித்த கோன் திரைப்படத்திற்காக அவர் பெரும் அளவில் பாராட்டப் பெற்றார். இது சுமாரான வெற்றியை அடைந்தது. ஜானம் சம்ஜா கரோ மேலும் வெற்றியடைந்தது; ஹம் தும் பே மர்த்தே ஹைன் மற்றும் கூப் சூரத் ஆகியவை வசூலில் சுமாரான வெற்றியடைந்தன.
2000வது வருடங்களில் மடோண்ட்கர் தமது கதாபாத்திர சித்தரிப்புகளில் வலிமையான, பிரம்மாண்டமான, உளவியல் ரீதியான அம்சங்களை வெளிப்படுத்தி, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். ப்யார் துனே க்யா கியா திரைப்படத்தில் தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்ததற்காகப் பல சாதகமான விமர்சனங்களைப் பெற்றார் மற்றும் பல சிறந்த வில்லன் நடிகை விருதுகளுக்கான பரிந்துரைப்பும் பெற்றார்.
2003வது ஆண்டு, அவர் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிஞ்சர் என்னும் படத்தில் அவர் 1947 இந்தியப் பிரிவினை கால கட்டத்தைச் சார்ந்த வட இந்தியப் பெண்ணாக நடித்தார்; கலீத் மொஹம்மத்தின் நாடக பாணியிலான தெஜீப் என்னும் திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் ஷபனா ஆஸ்மியுடன் நடித்தார்; இருப்பினும் பூத் என்னும் திகில் படத்தில் வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காகவே அவர் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டார். இதில் மடோண்ட்கர் ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைச் சித்தரித்தார். அவரது நடிப்புத் திறன் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது. அவர் சிறந்த செயல்திறனாளர் என்னும் பிரிவில் தமது முதல் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். மேலும், ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், ஜீ சினிமா விருதுகள் மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை க்கான விருதுகளைப் பெற்றார். பிறகு அவர் இத் திரைப்படத்திற்காக ராஜிவ் காந்தி விருது பெற்று தேசிய கௌரவம் அடைந்தார். இது பாலிவுட்டில் அவரது சாதனைக்கு ஒரு அங்கீகாரமாக அமைந்தது. அவரது நடிப்புத் திறனைப் பற்றி தரண் ஆதர்ஷ் இவ்வாறு எழுதினார்: "... படம் முழுவதும் ஊர்மிலா மடோண்ட்கருக்கே சொந்தமாகிறது. அவர் பிரமாதமாக நடித்துள்ளார் என்று கூறுவது அவரது நடிப்புத் திறனுக்கு அநீதி இழைப்பதாகும். அவர் ஆவியால் பீடிக்கப்படும் காட்சிகள் அசர வைப்பதாக உள்ளன. இந்த நடிப்பிற்கு விருது கிடைக்கவில்லை என்றால், வேறு எதற்குமே கிடைக்கக் கூடாது. போட்டிகள் அனைத்தையும் இது வெற்றாக்கி விடுகிறது."[8]
2004வது வருடம் ராம் கோபால் வர்மாவின் ஏக் ஹசினா தி என்னும் திரைப்படத்தில் இரக்கமில்லாத பழி வாங்குபவராக வெளிப்படுத்திய நடிப்புத் திறனுக்காக அவர் விமர்சன அங்கீரகாரம் பெற்றார். இதில் அவருடன் செயிஃப் அலிகான் இணைந்து நடித்திருந்தார். இத் திரைப்படத்தில் அவர் காதலனால் ஏமாற்றப்பட்டு சிறையிலிடப்படும் ஒரு பெண்ணின் பாத்திரத்தைத் திறம்படச் சித்தரித்தார்; செயிஃப் அலிகான் அந்தக் காதலனாக வேடமேற்றிருந்தார். இந்தப் பெண் பிறகு சிறையிலிருந்து தப்பித்து அவரைப் பழி வாங்குகிறாள். இந்தப் படத்தில் தமது நடிப்புத்திறனுக்காக மடோண்ட்கர் மீண்டும் ஒரு ஃபிலிம்ஃபேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
அடுத்த வருடம் 2005வது ஆண்டு மற்றொரு திகில் படமான நாயினா என்னும் திரைப்படத்தில் தமது திறமையை முயன்றார்; ஆனால், இந்தப் படம் தோல்வியுற்றது. இருப்பினும், ஜானு பருவாவின் மேனே காந்தி கோ மாரா என்னும் கலைப் படத்தில் அனுபம் கேரின் மிகுந்த அக்கறை கொண்ட மகளாக அவர் நடித்தது சிறந்த வரவேற்பைப் பெற்றது; அவர் இரண்டாம் முறையாக சிறந்த நடிகைக்கான பாலிவுட் திரைப்பட விருது பெற்றார்.
வெற்றிகரமான நடிப்புத் தொழிலுக்கு அப்பால், அவர் ஒரு மிகச் சிறந்த நடனமணியாகவும் மதிக்கப்படுகிறார்; பல பாலிவுட் படங்களில் ஐட்டம் நம்பர் எனப்படும் கவர்ச்சி நடனங்கள் ஆடியுள்ளார். மிகவும் அறியப்பட்ட அவரது கவர்ச்சி நடனம் சைனா கேட் என்ற படத்தில் சம்மா சம்மா என்ற பாடலுக்கு அவர் ஆடியதாகும். புகழ் பெற்ற ஏனைய பாடல்கள் லஜ்ஜா என்னும் வெற்றிப் படத்தில் இடம் பெற்ற ஆயியே ஆஜாயே என்னும் பாடலை உள்ளடக்கும். 1975வது வருடத்தில் மாபெரும் வெற்றிப் படமான ஷோலே யின் மறுவாக்கமான ராம் கோபால் வர்மா கி ஆக் என்னும் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் ஆடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூலப் படத்தில் ஹெலன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.
2007வது வருடம், மடோண்ட்கர் ஆஷாவும் நண்பர்களும் வால்யூம் 1 என்னும் ஆஷா போன்ஸ்லேயின் இசைத் தகட்டிற்காகக் குரல் அளித்தார். இதில் அவர் ஆஷாவுடன் "மெஹபூபா தில்ரூபா" என்னும் பாடலை இணைந்து பாடினார். உண்மையில், 1990 தொடங்கி 2000கள் வரை ஊர்மிலாவுக்கான அதிக பட்சமான பாடல்களை போன்ஸ்லேதான் பாடியுள்ளார்.
2008வது ஆண்டில், 1980வது வருடப் படமான கர்ஜ் என்னும் திரைப்படத்தின் மறுவாக்கமான கர்ஜ்ஜ்ஜ் என்னும் திரைப்படத்தில் அவர் ஹிமேஷ் ரேஷம்மியாவுடன் காணப்பட்டார். 2008வது வருடம் இந்தியத் தொலைக்காட்சியில் வார் பரிவார் என்ற பெயரில் ஒரு யதார்த்த நிகழ்ச்சி வழங்குனராகவும் அவரைக் கண்ணுற்றது.
[தொகு] விருதுகள்
| ஆண்டு | விருது விழா நிகழ்ச்சி | வகை | திரைப்படம் | முடிவு |
|---|---|---|---|---|
| 1996 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த நடிகை[9] | ரங்கீலா | பரிந்துரை |
| 1998 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | ஜுதாயி | பரிந்துரை |
| 1999 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த நடிகை[10] | சத்யா | பரிந்துரை |
| 2002 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த வில்லன் நடிகை | ப்யார் துனே க்யா கியா | பரிந்துரை |
| ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| பாலிவுட் திரைப்பட விருதுகள் | மிகவும் பரபரப்பூட்டிய நடிகை | வெற்றி | ||
| 2004 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த நடிகை (விமர்சகர்கள்) | பூத் | வெற்றி[11] |
| ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | வெற்றி | ||
| அப்ஸரா விருதுகள் | சிறந்த நடிகை | வெற்றி | ||
| ஐஐஎஃப்ஏ விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | வெற்றி | ||
| பாலிவுட் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | வெற்றி | ||
| ராஜிவ் காந்தி நினைவு விருதுகள் | பாலிவுட்டில் சாதனை[12] | வெற்றி | ||
| 2005 | ஃபிலிம்ஃபேர் விருதுகள் | சிறந்த நடிகை | ஏக் ஹசினா தி | பரிந்துரை |
| ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| ஐஐஎஃப்ஏ விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| 2006 | பாலிவுட் திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகை | மைனே காந்தி கோ மாரா | வெற்றி |
| அப்ஸரா விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| ஜீ சினி விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை |
[தொகு] திரைப்பட விவரங்கள்
| ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1980 | கலியுக் | ||
| ஜகோல் | |||
| 1983 | மாசூம் | பிங்கி | |
| 1985 | சுர் சங்கம் | ||
| 1987 | டெகாயிட் | ||
| ஜிந்தகி | |||
| 1989 | படே கர் கி பேட்டி | ||
| சாணக்கியன் | ரேணு | மலையாளத் திரைப்படம் |
|
| 1991 | நரசிம்மா | ஹிந்தியில் நடித்த முதல் வயது வந்தவர் கதாபாத்திரம் | |
| 1992 | சமத்கார் | மாலா | |
| அந்தம் | தெலுங்குத் திரைப்படம் | ||
| துரோகி | பாவனா | ||
| 1993 | ஸ்ரீமான் ஆஷிக் | ||
| காயம் | தெலுங்கு திரைப்படம் | ||
| பே தர்தி | |||
| 1994 | கானூன் | ||
| ஆ கலே லக் ஜா | ரோஷினி | ||
| 1995 | ரங்கீலா | மிலி ஜோஷி | பரிந்துரைப்பு, ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகை விருது |
| [[தச்சோலி வர்கீஸ்
செவாகர்]] |
மாயா | மலையாளத் திரைப்படம் | |
| மணி மணி | தெலுங்குத் திரைப்படம் | ||
| 1996 | இந்தியன் | சப்னா | தமிழ்த் திரைப்படம், ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ஹிந்தியில் மறு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. |
| 1997 | ஜுதாயி | ஜான்வி சஹானி | பரிந்துரைப்பு ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகை விருது |
| மேரே சப்னோன் கி ரானி | |||
| தௌட் | பவானி | ||
| அஃப்லாடூன் | |||
| அனகனாக ஒக்க ராஜு | மது | தெலுங்குத் திரைப்படம் | |
| 1998 | சத்யா | வித்யா | பரிந்துரைப்பு ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகை விருது |
| குத்ரத் | மாலா | ||
| சைனா கேட் | கவர்ச்சி நடனம் | ||
| சோட்டா சைத்தான் | |||
| 1999 | ஜானம் சம்ஜா கரோ | சாந்தினி | |
| ஹம் தும்பே மர்த்தே ஹை | ராதிகா | ||
| மஸ்த் | மல்லிகா | ||
| தில்லகி | ஷாலினி | ||
| கூப்சூரத் | ஷிவானி | ||
| கோன் | பெயரற்ற கதாபாத்திரம் | முதல் வில்லன் பாத்திரம் | |
| 2000. | ஜங்கிள் | அனு | |
| தீவானா | சப்னா | ||
| குன்வாரா | ஊர்மிலா | ||
| 2001 | ப்யார் துனே கியா கிய | ரியா | வில்லன் கதாபாத்திரம் பரிந்துரைப்பு, ஃபிலிம் ஃபேர் சிறந்த வில்லன் நடிகை விருது |
| லஜ்ஜா | சிறப்புத் தோற்றம், கவர்ச்சி நடனம் | ||
| 2002 | கம்பெனி | ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம் | |
| ஓம் ஜெய் ஜகதீஷ் | நீத்து | ||
| தீவாங்கி | சர்கம் | ||
| 2003 | பூத் | சுவாதி | வெற்றியாளர் , ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகை விருது (விமர்சகர்கள்) |
| தெஜீப் | தெஜீப் மிர்ஜா | ||
| பிஞ்ஜர் | புரோ | ||
| 2004 | ஏக் ஹசினா தி | சாரிகா வர்தக் | பரிந்துரைப்பு, ஃபிலிம் ஃபேர் சிறந்த நடிகை விருது |
| 2005 | நாயினா | நாயினா | |
| மைனே காந்தி கோ மாரா | திரிஷா | ||
| 2006 | பனாரஸ் | ஷ்வேதாம்பரி | |
| பஸ் ஏக் பல் | அனாமிகா | ||
| 2007 | ராம் கோபால் வர்மா கி ஆக் | ஜிப்சி நடனக்காரி | கவர்ச்சி நடனம் |
| ஓம் ஷாந்தி ஓம் | தாமாகவே | சிறப்புத் தோற்றம் | |
| ஸ்பீட் | ரிச்சா | ||
| 2008 | கர்ஜ்ஜ்ஜ்ஜ் | காமினி | வெளியிடப்பட்டு விட்டது |
| 2009 | அப் தில்லி தூர் நஹின் | பரூட்டிற்கான குரல் | அறிவிக்கப்பட்டுள்ளது. அசைவூட்டப் படம். |
| நான் ஸ்டாப் ஃபன் | இசை ஆசிரியர் | படப்பிடிப்பில் | |
| குலெல் | தயாரிப்பிற்கு முந்தைய நிலையில்[13] |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Verma, Sukanya (2002). "Star of the Week". Rediff.com. பார்த்த நாள் 2008-11-10.
- ↑ Verma, Sukanya (29 May 2003). "'My knuckles would turn white'". Rediff.com. பார்த்த நாள் 2008-11-10.
- ↑ Srinivasan, V S (16 January 1998). "Rangeela Re!". Rediff.com. பார்த்த நாள் 2008-11-11.
- ↑ Kulkarni, Ronjita (2008). "Bollywood's top 5, 2003: Urmila Matondkar". Rediff.com. பார்த்த நாள் 2008-11-11.
- ↑ "Box Office 1997".
- ↑ "Filmfare Nominations 1997".
- ↑ "Box Office 1999".
- ↑ "Bhoot Review".
- ↑ "Filmfare Nominations 1995".
- ↑ "Filnfare Nominations 1998".
- ↑ "Filmfare Winners 2003".
- ↑ "Rajiv Gandhi Awards". Rajivgandhiawards.com. பார்த்த நாள் 2008-11-22.
- ↑ India.fm. "Gulel Cast And Crew".