உஷா மெக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hon'ble Ms. Justice
உஷா மெக்ரா
நீதிபதி-தில்லி உயர்நீதி மன்றம்
பதவியில்
13 சூலை 1990 – 14 நவம்பர் 2003
பரிந்துரைப்புஇரங்கநாத் மிசுரா
நியமிப்புஇராமசாமி வெங்கட்ராமன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 நவம்பர் 1941 (1941-11-14) (அகவை 82)

உஷா மெக்ரா (Usha Mehra-பிறப்பு: நவம்பர் 14,1941) என்பவர் இந்தியாவின் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.[1] இவர் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரித்து வழக்குத் தொடுப்பதில் காவல்துறை மற்றும் நீதித்துறை நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்துக் குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டார்.[2]


பணி[தொகு]

நீதித்துறை வாழ்க்கை[தொகு]

மெக்ரா 1962ஆம் ஆண்டில் தில்லி வழக்கறிஞர் குழுவில் சேர்ந்தார். மேலும் தில்லியில் சட்டப் பயிற்சி பெற்றார். இவர் 1965 முதல் 1980 வரை வடக்கு ரயில்வே வழக்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1980ஆம் ஆண்டில், மெக்ரா மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் 1984 முதல் 1987 வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளராக இருந்தார். 1990 சூலை 13 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 1990 நவம்பர் 7 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1] 2003 நவம்பர் 14 அன்று நீதித்துறை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Former Judges: Justice Usha Mehra". Delhi High Court.
  2. Dhar, Aarti (2012-12-26). "Commission to suggest steps to make Delhi safe for women" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/commission-to-suggest-steps-to-make-delhi-safe-for-women/article4241274.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_மெக்ரா&oldid=3905378" இலிருந்து மீள்விக்கப்பட்டது