உலக சிந்தனை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக சிந்தனை நாள் (World Thinking Day) (முன்னர் சிந்தனை நாள் என்று கொண்டாடப்பட்டது) ஆண்டுதோறும் பிப்ரவரி 22இல் அனைத்துப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களால் கொண்டாடப்படுகிறது . [1] உலகெங்கிலும் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டி அமைப்புகளாலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தங்கள் "சகோதரிகள்" (மற்றும் "சகோதரர்கள்"), சாரண வழிகாட்டுதலின் அர்த்தம் மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் பற்றி சிந்திக்கின்றனர்.

சாரணர் மற்றும் வழிகாட்டி இயகத்தின் நிறுவனர் ராபர்ட் பேடன்-பவல் மற்றும் அவரது மனைவி மற்றும் உலக தலைமை வழிகாட்டியான லேடி ஓலேவ் பேடன்-பவல் ஆகியோரின் பிறந்தநாள் என்பதால் பிப்ரவரி 22இல் சிந்தனை தினம் கொண்டாடப்படுகிறது. சில சாரணர்கள் இந்நாளினை B.-P நாள் அல்லது நிறுவனர் தினம் என்று கொண்டாடுகிறார்கள் .

வரலாறு[தொகு]

1926 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கேம்ப் எடித் மேசியில் (தற்போது எடித் மேசி மாநாட்டு மையம்) நடைபெற்ற நான்காவது வழிகாட்டி சர்வதேச மாநாட்டில், பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் சிறப்பு சர்வதேச தினத்தின் அவசியத்தை மாநாட்டின் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். மேலும், அத்தகைய நாளில் பெண் வழிகாட்டுதல் மற்றும் பெண் சாரணர்களின் அவசியத்தினை எடுத்துரைக்கவும் இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றியினையும் பாராட்டுகளையும் வழங்குவதற்காக அவசியத்தினையும் இந்த மாநாட்டில் எடுத்துரைத்தனர்.

சாரணர் இயக்கத்தின் நிறுவனர் பேடன்-பவல் மற்றும் அவரது மனைவியும் உலக தலைமை வழிகாட்டியுமான லேடி ஓலவ் பேடன்-பவல் ஆகிய இருவரின் பிறந்தநாளான பிப்ரவரி 22 அன்று இந்த நாள் கொண்டாடப்பட வேண்டும் என பிரதிநிதிகள் முடிவு செய்தனர்.

1999 இல், அயர்லாந்தில் நடைபெற்ற 30வது உலக மாநாட்டில், இந்தச் சிறப்பு நாளின் உலகளாவிய அம்சத்தை வலியுறுத்தும் வகையில், "சிந்தனை நாள்" என்பதிலிருந்து "உலக சிந்தனை நாள்" என்று பெயர் மாற்றப்பட்டது.

உலக சிந்தனை நாள் கருப்பொருள்[தொகு]

பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் உலக சங்கம் ஒவ்வொரு உலக சிந்தனை தினத்திற்கும் ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அது தொடர்பான செயல்பாடுகளை முன்மொழிகிறது.

  • 2005: "உணவைப் பற்றி சிந்தியுங்கள்"
  • 2006: "இளமைப் பருவத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தித்தல்"
  • 2007: "உங்கள் திறனைக் கண்டறியுங்கள்".
  • 2008: "தண்ணீர் பற்றி சிந்தியுங்கள்"
  • 2009: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்: "எய்ட்ஸ், மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுவதை தடுக்கவும்"[2]
  • 2010: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 1: "உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஒன்றாக இணைந்து தீவிர வறுமை மற்றும் பசிக்கு முடிவுகட்டுதல்". [2]
  • 2011: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 3: "பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது நம் உலகத்தை மாற்றும்".[2]
  • 2012: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 7: "நமது கிரகத்தை காப்பாற்றுவோம்". [2]
  • 2013: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 4: "குழந்தை இறப்பைக் குறைத்தல்" மற்றும் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 5: "தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்" [2]
  • 2014: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 2: "முதன்மைக் கல்விக்கான உலகளாவிய அணுகலை வழங்குதல்" [2]
  • 2015: புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் 8: "உலகளாவிய வளர்ச்சிக்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல்" [2]
  • 2016: "இணைத்தல்" [3]
  • 2017: "வளர்தல்" [4]
  • 2018: "தாக்கம்" [5]
  • 2019: "தலைமை" [6]
  • 2020: "லிவிங் திரெட்ஸ்" [7]
  • 2021: "அமைதிக்காக ஒன்றிணைவோம்" [8]
  • 2022: "நமது உலகம், நமது சமமான எதிர்காலம்: சுற்றுச்சூழல் மற்றும் பாலின சமத்துவம் "
  • 2023: "நமது உலகம், நமது அமைதியான எதிர்காலம்: சுற்றுச்சூழல், அமைதி மற்றும் பாதுகாப்பு"
  • 2024: "நமது உலகம், நமது செழிப்பான எதிர்காலம்: சுற்றுச்சூழல் மற்றும் வறுமை ஒழிப்பு"

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Thinking Day". girlscouts.org. Girl Scouts of the United States of America. பார்க்கப்பட்ட நாள் October 21, 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 WAGGGS. "World Thinking Day MDG 4 Activity Pack" (PDF). WAGGGS. p. 3. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
  3. "World Thinking Day 2016 - Connect Activity Pack". WAGGGS.
  4. "World Thinking Day 2017 - Grow Activity Pack". WAGGGS (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-12-26.
  5. "World Thinking Day 2018 - Impact Activity Pack". WAGGGS. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  6. "World Thinking Day 2019 - Leadership Activity Pack". WAGGGS. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.
  7. "World Thinking Day 2020 - Living Threads Activity Pack". WAGGGS. பார்க்கப்பட்ட நாள் 20 February 2020.
  8. "World Thinking Day 2021 - Stand Together for Peace Activity Pack". WAGGGS. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சிந்தனை_நாள்&oldid=3895661" இலிருந்து மீள்விக்கப்பட்டது