உரோங்குலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோங்க்லு
முதல் நிலைத் தளபதி
மாபெரும் சபை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1836-04-06)6 ஏப்ரல் 1836
இறப்பு11 ஏப்ரல் 1903(1903-04-11) (அகவை 67)
பெய்ஜிங், சிங் அரசமரபு
துணைவர்வான்சென்[1]
பிள்ளைகள்இயோலன் (மகள்)
வேலைஅரசியல்வாதி
வம்சம்குவால்கியா
இறப்பிற்கு பின்னர் இடப்பட்ட பெயர்வென்சோங்

உரோங்லு (Ronglu) (6 ஏப்ரல் 1836 – 11 ஏப்ரல் 1903) சொங்குவா எனவும் அறியப்பட்ட இவர் மறைந்த சிங் வம்சத்தின் மஞ்சு அரசியல் தலைவராகவும், இராணுவத் தலைவராக இருந்தார். மஞ்சு எட்டு பதாகைகளின் எளிய வெள்ளை பதாகையின் கீழ் இருந்த குவால்கியா குலத்தில் இவர் பிறந்தார். [2] பேரரசி டோவாகர் சிக்சியால் ஈர்க்கப்பட்ட இவர் சிங் அரசாங்கத்தில் பல முக்கியமான அரசு மற்றும் இராணுவ பதவிகளில் பணியாற்றினார். இதில் சோங்லி யமென், மாபெரும் சபை, செயலாளர், சிலியின் ஆளுநர், பியாங் வர்த்தக அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், ஒன்பது வாயிகள் காலாட்படை தளபதி, ஊவி படைத்தளபதி போன்றப் பதவிகள் அடங்கும். மேலும், இவர் சீனாவின் கடைசி பேரரசரும், சிங் வம்சத்தின் புயியின் தாய்வழி தாத்தா ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும்[தொகு]

மஞ்சு எட்டு பதாகைகளின் எளிய வெள்ளை பதாகையின் கீழ் இருந்த மஞ்சு குவால்கியா குலத்தில் இவர் பிறந்தார். இவரது தாத்தா, தாசிகா, காஷ்கரில் பேரரசின் அதிகாரியாக பணியாற்றினார். இவரது தந்தை, சாங்சோ, ஒரு இராணுவத் தளபதியாவார்.

இவர், பேரரசின் அரசுப் பணியில் சேர விரும்பி வெற்றிகரமாக அனுமதி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வகை பதவியான இன்செங் என்றப் பதவியை வகித்தவர். மேலும், உதவி இயக்குநராக பணிகள் அமைச்சகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சிலி மாகாணத்தில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

தோங்சி பேரரசரின் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் (1860 களின் முற்பகுதியில்), இவர் துப்பாக்கிப் பிரிவை அமைத்தார். மேலும் ஐந்தாம் நிலை நீதிபதி பதவியைப் பெற்றார். பின்னர், ஒரு சோங்கிங் ஆக மாற்றப்படுவதற்கு முன்பு இவர் ஒரு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். வென்சியாங்கின் பரிந்துரையின் மூலம், இவர் பணி அமைச்சகத்தின் துணை செயலாளராக ஆனார். பின்னர், இவர் மீண்டும் வருவாய்த்துறை அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் பேரரசின் உள் துறையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

பேரரசர் தோங்சி 1875 இல் இறந்தார். அவருக்குப் பின் அவரது உறவினர் பேரரசர் குவாங்சு பதவிக்கு வந்தார் . அதே ஆண்டில், உரோங்லு ஒரு காலாட்படை தளபதியாக ஆனார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் ஒரு தணிக்கை மற்றும் பணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1878 ஆம் ஆண்டில், பாடிங் பேரசின் அரசவைக்கு ஒரு நினைவுச்சின்னத்தை எழுதினார். சில அதிகாரிகள் ஒரே நேரத்தில் பல துறைகளை கவனித்து வந்தனர். எனவே, உரோங்லு பணிகள் செயலாளர், பேரசின் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இவர், ஆரம்பத்தில் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு நிலை பதவியிறக்கப்பட்டார். மேலும் 1879 இன் ஆரம்பத்தில் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், 1891 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு சிய்யான் மாகாணத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

பிற்கால தொழிலும், இறப்பும்[தொகு]

1900 இன் பிற்பகுதியில், பேரரசி டோவாகர் சிக்சி இவரை சிய்யானுக்கு அழைத்தார். அங்கு இவர் அன்புடன் வரவேற்கப்பட்டார். இவருக்கு பேரரசின் மரியாதை அணிகளான மஞ்சள் ஜாக்கெட், இரண்டு கண்கள் கொண்ட மயில் இறகு, ஊதா நிற இடுப்புத் துணி ஆகியவை வழங்கப்பட்டன. இவர் பேரரசி டோவாகர் சிக்சியையும், குவாங்சு பேரரசரையும் தலைநகருக்கு அழைத்துச் சென்றார்.

இறப்பு[தொகு]

உரோங்லு 1903 இல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Initially Ronglu's concubine, she became his official wife when Ronglu's first wife died.
  2. Woo, X.L. (2002). Empress Dowager Cixi: China's Last Dynasty and the Long Reign of a Formidable Concubine. U.S.: Algora Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0875861660. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோங்குலு&oldid=3056866" இலிருந்து மீள்விக்கப்பட்டது